உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 20

அணுகின் அவை அழுக் ககன்று தூய்தாகி நிலைபெறுதற்குரிய நிலைக்களமாம் உண்மையைத் தன் பெயரினாலேயே விளக்கி, முளை இள ஞாயிற்றின் -கீழ்பால் எழுகின்ற இளைய கதிரவ னெதிரே, தளை ஞெகிழ்ந்து விரிந்த - முறுக்கவிழ்ந்து மலர்ந்த, எரி அகை தாமரை போல- நெருப்புத் தழைத்ததென விளங்குந் தாமரைமலரை ஒப்ப, விரிபுகழ்த் தொண்டர்கள் எதிரில் கண்டிட - பரவிய அருட்புகழை யுடைய அடியார்கள் எதிரே கண்டிடலும், மலர்ந்த நிகர் இல் இன்ப நறை முறை ஒழுக்கி உடனே மலர்ந்து ஒப்பில்லாப் பேரின்பமென்னுந் தேனைத் தொடர்பாக ஒழுகச் செய்து, பெருமையொடு வைகும் திருவடியானும் அருட் பெருமையொடு வீற்றிருக்குந் திருவடியினாலும்;

துப்பு - தூய்மை (பிங்கலந்தை), 'ஞாயிற்றின்' என்பதன் பின் எதிரே என ஒரு சொல் வருவித்துரைக்க.

'முளை', இங்கு வினை. 'எரியகை தாமரை'யென இங்கு வந்தாற்போலவே ‘எரியகைந்தன்ன வேடில் தாமரை' யெனப் பொருநராற்றுப்படை (159) யின் கண்ணும் வருதல் காண்க. எரியகைந்ததென வென்று சில வருவித்துக் கொள்க. ஞாயிற்றி னெதிரே தாமரை மலர்ந்தாற்போல அன்பொளி ததும்புந் தொண்டர்களெதிரே பிள்ளையார் தந் திருவடித்தாமரை மலராநிற்கு மென்க. 'அடி' எல்லாவற்றிற்கும் அடிப்படையாவது. "தாட்டாமரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி” என்ற திருவாசகத் திருமொழியும் இங்ஙனமே நுவன்றமை யறிக (திகுவம்மானை, 6).

-

(90-102) பெரு மணல் எக்கர்ச் சிறுகுடி வாழ்க்கைக் குறுமொழி மாக்கள் - உயரமான மணற்குன்றின் கண்ணே சிறிய குடிவாழ்க்கையினையுடைய புன்சொற்பேசும் மக்களாகிய நெய்தல்நிலத்து ஆடவர், உறுமீன் படுத்தும் கடலிலுள்ள பெரிய மீன்களை வலையிலே அகப்படுத்தும், ஆழ்திரை மூழ்கி வீழ்மணி எடுத்தும் - ஆழமான கடலின் கண் மூழ்கி விரும்பத்தக்க முத்துச் சிப்பிகளை எடுத்தும், கரும் கடல் ஊர்ந்த வெள்வளை வாரியும் - கரிய கடல்நீரின்மேன் மிதந்து வந்த வெள்ளிய சங்குகளை அள்ளியும், நிரைநிரை கரையில் குவையினர் செல்ல - வரிசை வரிசையாகக் கரையின்கண் அவற்றைக் குவித்தனராய் ஏக, (அஞ்ஞான்) மறிகயல் உகளும் திருமுக நுளைச்சியர் - ஓடி மீளுங் ஓடிமீளுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/251&oldid=1586995" இலிருந்து மீள்விக்கப்பட்டது