உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

225

(74-77) பால்நுரை முகந்த பரிசொடு பொரூஉம் - பாலின் - நுரையை அள்ளி எடுத்த தன்மையை ஒக்கும், தூவெள் அறுவை அசைஇ தூய வெள்ளிய ஆடையை உடுத்து, மூவகை மடியுடன் விளங்கி - மூன்று வகையான மடிப்புகளுடன் விளங்கி, வடிவுடன் சரிந்து - அழகிய வடிவுடன் சரிவுடையதாய், நடத்தொறும் குலுங்கும் வயிற்றினானும் - நடக்குந்தோறுங் குலுங்கி யசைகின்ற வயிற்றினாலும்;

‘பால்நுரை’,

தூய்மைக்கும்

வண்மைக்கும், மென்மைக்கும் உவமையாகலின், 'தூவெள்ளறுவை' யென அறுவை விதந்துரைக்கப்பட்டது. ‘அறுவை’, நீளநெய்தது பின் துண்டுதுண்டாய் அறுக்கப்படுதலின் வந்த பெயர்.

தறியில்

‘அசைஇ’,உடுத்து, இஃதிப்பொருட்டாதல், “புலித்தோலை அரைக்கு அசைத்து (மழபாடி, 1) எனவருஞ் சுந்தரர் தேவாரத்தால் தெளியப்படும்.

‘மடி’,என்றது, இங்கு வயிற்றின் சதைமடிப்புக்கு.

ம்

- -

க்

(78-82) எழும் இடம் தசைந்து - எழுகின்ற இடம் தசை கொண்டு, பின் - அதற்குமேல், ஒழுகுதொறும் மெலிந்து நீளுமிடமெல்லாம் வரவர மெலிவுடையதாய், மழைக் க களிற்றின் புழைக்கை ஒத்தும் மழைக்கு நிகராய் ஒழுகும் மதத்தினையுடைய யானையின் துதிக்கைக்கு ஒப்பாகியும், கொழும் கனி வாழையின் கோழ் அரை ஏய்ப்ப ஊறும் ஒளியும் வீறுஉறத் திகழும் - கொழுவிய பழங்களையுடைய வாழை மரங்களின் வழுவழுப்பான அடிமரங்களை ஒப்ப மழமழ வென்னும் ஊறும் பள்பள பளபளவென்னும் ஒளியும் சிறப்புற விளங்கும், நிறம் கெழு மரபின் குறங்கினானும் செந்நிறம் பொருந்திய தன்மையினையுடைய தொடைகளாலும்;

-

எழுமிடம், தோன்றும் முதலிடம்; மழைக்கடம், உவமத் தொகை; புழைக்கை, தொளையுடைய கை. ஊறு, தொட்டுணர்வு. பிள்ளையார் திருமேனி செந்நிறத்ததாகலின் 'நிறங்கெழு குறங்கு' என்றார்; நிறம் ஈண்டுச் செந்நிறம்.

(83-89)எப்பால் பொருளும் துப்புற வைகும் நிலைக்களம் என்பது பெயரின் காட்டி - எவ்வகையான பொருளுந் தன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/250&oldid=1586994" இலிருந்து மீள்விக்கப்பட்டது