உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ 20* மறைமலையம் – 20

பிள்ளையார்தந் திருமேனி நிறஞ் சிவப்பாகலின் அவரது திருமார்பத்திற்குப் பவளப்பலகையினை உவமை கூறினார். யானையென்னுங் குறிப்பினாலும் 'வல்லி' யென்னுங் குறிப்பி னாலும் அவையிரண்டும் முறையே ‘தெய்வயானை' 'வள்ளி’ யென்னுங் காதற் கிழத்தியரின் கொங்கைமுகடு உரிஞ்சிய காதற்செயல்களைக் குறிப்பவாயின.

மார்பின்கண் வரிமூன் றொழுகுதல் சிறந்த ஆடவரின் நல்லிலக்கணமாகும்; “பெருமையையுடைய மார்பிற் கிடக்கின்ற உத்தம லக்கணமாகிய சிவந்த மூன்று வரியினையும்' (திருமுருகாற்றுப்படையுரை, 106) என்று நச்சினார்க்கினியர் இவ்வுண்மையை நன்கெடுத்துக் கூறுவர். “வரையகன் மார்பிடை வரியு மூன்றுள்' (கேமசரியா ரிலம்பகம், 51) என்பது சிந்தாமணி.

-

-

(70-73) மழையும் மரனும் குழைந்து ஒருங்குஓட நீர் சுரந்த புயலுங் கற்பகமரமுஞ் சோர்ந்து உடன்குலைய, விழுமிய பொருள்பல வேண்டிநர்க்கு உதவும் சிறந்த பொருள்கள்பலவும் வேண்டிய அடியார்க்கு அளிக்கும், தாள் தொடு தடக்கையில் முழந்தாளைத் தொடும் அளவு நீண்ட பெரியகையில், தாய் உவந்து

-

ஈத்த அன்னையாகிய உமைப்பிராட்டி மகிழ்ந்து கொடுத்த, வாலிதின் விளங்கும் வேலினானும் வெள்ளிதாக மிளிரும்

வேற்படையினாலும்;

'மரன்' ஈண்டுக் கற்பகமரம்; அஃது இந்திர னுலகில் உள்ளது; மழையுங் கற்பகமும் இந்திர னுலகிற்குக் கீழ் மண்ணுலகிற் பயன்படும் பொருள்களை மட்டுமே தரவல்லன வன்றி, வானுலகிற்கு மேலுள்ள உயர்ந்த தேவர் நிலைகளையும் அவையிற்றிற்கும் மேலான பேரின்ப வீட்டுலகினையுந் தரவல்லன அல்ல. மற்றுப், பிள்ளையார் தந்திருக்கைகளோ மண்ணுலக வின்பங்களொடு, விண்ணுலக வின்பங்களும் அவற்றிற்கும் மேலாக வீட்டுலக வின்பமும் அளிக்க வல்லன என்றவாறு.

ஆண்மக்களிற் சிறந்தார்தங் கைகள் முழந்தாளளவும் "தாட்டாழ் தடக்கைத் தனிமதி

66

நீண்டிருத்தல், வெண்குடையான்' என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளான் உணர்க. 'ஈத்த’ கொடுத்த எனப் பொருள் தரல் “செம்பொன் வயிரியர்க்கு ஈத்த’ (புறம், 9) என்புழியுங் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/249&oldid=1586993" இலிருந்து மீள்விக்கப்பட்டது