உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

223

வலது புறத்திலேயே பொருந்துமாகலின், “உறும் இடன் படாஅது ஒருபுறம் ஒற்ற வருமுறை நோக்கி” என்றருளிச் செய்தார்.

வேது - வெம்மை ஒற்றடம்; ‘முலைவேதின் ஒற்றி” என்றார் கலித்தொகையிலும் (106).

'கள்ளவிழ் குழலாள் எழீஇ ஒருபுறம் ஒற்ற வருமுறை நோக்கி' எனத் தொடர் கூட்டுக. 'எழுதல்', இங்கு உள்ளவெழுச் சியைக் குறித்தது.

கடப்பமாலையின் மலர் மலர்ந்திருக்குந் தோற்றத்தை நகுவதாகக் கூறியது தற்குறிப்பேற்றம்.

மரா- வெண்கடம்பு (திவாகரம்); பிள்ளையார் உவந்தது கடப்ப மாலையாதல் ‘உருளிணர்க்கடம்பின் ஒலிதாரோயே” என்னும் பரிபாடலாலும் (5, 81), “மராஅத் துருள்பூந்தண்டார் புரளும்மார்பினன்” என்னுந் திருமுருகாற்றுப்படையாலும் (10- 11) அறியப்படும்.

இப்பகுதிகளின் உருவக உவமைக் கற்பனையழகுகள் பெரிதும் மகிழற்பாலன வாகும்.

-

-

-

-

(63-69) கைவல் வேகடி கைவன்மை யுடைய மணியிழைப் போன், ஐது உறக் கடைந்து - அழகு கெழுமத் திரட்டி, வழுவழுப்பு ஆக்கிய - மழமழப்பாகச் செய்த, கொழும் துகிர்ப் பலகை வளமாள பவளப்பலகைகள், புணர்ந்து ஒருங்கு இரண்டு கிடந்ததுபோல இரண்டு சேர்ந்து ஒன்றாய்ப்பொருந்திக் கிடந்ததுபோல, கண் அகன்று ஓங்கிய கவின் கெழு மார்பத்து- இடம் அகன்று வளர்ந்த அழகு பொருந்திய மார்பின்கண், யானை மருப்பு உழுத சுவடுபோலவும் - யானையின் கொம்பு உழுதமை யால் உண்ட ான அடையாளம் போலவும், வரையொடு படர்ந்த வல்லிபோலவும் - மலையின்மேற் படர்ந்த வள்ளிக் கொடி போலவும், வரி மூன்று ஒழுகிய திருவினானும் மூன்று கோடுகள் நீண்டு கிடந்த மேன்மையினாலும்;

-

வேகடி - மணிமாசு அகற்றுவோன்; “திருமணிகுயிற்றுநரை’ வேகடிகள் என்பர் சிலப்பதிகார உரைகாரர் (5, 46). 'வேகடி' தமிழ்ச்சொல், இது வடமொழிக்கண்ணுஞ் சென்றது. ஐது அழகு, (சிலப்பதிகாரஉரை, 3,152).

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/248&oldid=1586992" இலிருந்து மீள்விக்கப்பட்டது