உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

222

-

மறைமலையம் - 20

வள்ளியம்மையார் எனப்படுந் தேன்சிந்துங் கூந்தலையுடைய பிராட்டியார், தடமுலை வேதின் தமது அகன்ற கொங்கையாகிய ஒற்றடத்தால், படுபுண் ஒற்ற உளம் கொண்டு எழீஇ தெய்வயானை யம்மையார் முன்பு காதற்போர் செய்தமையால் உண்டான புண்ணை ஒற்றுதற்கு உளம் நினைந்து எழுந்து, உறும் இடன் படாஅது ஒருபுறம் ஒற்ற வரும் முறை நோக்கி அப் புண்ணுற்ற இடத்திற் படாதபடி மற்றோரிடத்தில் ஒன்றுதற்கு வருந் தன்மையைக் கண்டு, கொழுநனை பிணைத் தமரா நறும் தொடலை-அம் முருகவேள் மார்பிற் பொருந்திக் கிடக்கின்ற கொழுமையான மொட்டுகளால் தொடுக்கப்பட்ட மணங்கமழுங் கடப்ப மாலையானது, முறுவலித்து என்ன முறுக்கு உடைந்து அசைய புன்னகை புரிந்தாற்போலக் கட்டுவிட்டு மலர்ந்து புரள, வாள்வலி நிலையும் தோளினாலும் வாட்படையின் வல்லமை நிலைத்த தோள்களாலும்;

உலம்

(திவாகரம்).

-

திரள்கல் (திவாகரம்). எழு

-

இருப்புத்தூண்

"மலையொடுபொருத மால்யானை' இளம்பூரணர் உரை (தொல்காப்பியம், சொல், 73)

புலவோர் கூறும் பொருண்மொழி காட்டத் தெய்வயானை கொங்கைகள் முருகவேள் மார்பொடு பொருதனவென்க; வள்ளி மேலுள்ள சீற்றத்தால் தெய்வயானை முருகப்பிரான் மார்பொடு பொருதனளெனவுந், தன் காதலற்கு அவள் செய்த ஊறு பாட்டினைத் தீர்ப்பாள்போல் வள்ளி தன் தடமுலை வேது கொண்டு ஒற்றினாளெனவும் ஒருநயந் தோன்ற உரைத்தார்.

நுங்க -விழுங்க; மார்பின்கண் அழுந்திய குத்தினை அம்மார்பு ஏற்று விழுங்கியதை யொத்ததென முருகப்பிரானுக்கு அதன்கண் உள்ள வேட்கையினைக் குறிப்பிட்டார்; நுங்கல் விழுங்குதற் பொருட்டாதல் சீவகசிந்தாமணி (4,244) நச்சினார்க் கினிய ருரையிற் காண்க.

இடப்புறம் அமர்ந்திருக்கும் தெய்வயானையம்மையாரால் நேர்ந்த இடதுபக்கத்துப் புண்ணை ஒற்றி ஆற்றாது, வலப்புறம் அமர்ந்திருக்கும் வள்ளியம்மையின் கொங்கை பெருமானுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/247&oldid=1586991" இலிருந்து மீள்விக்கப்பட்டது