உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

221

இது காறும் முருகப் பிரான்றன் பிள்ளைமைக் கோலத்தை நினைந்து அணிந்துரைத்ததாகும்; மேல் வருவன அவன்றன் கட்டிளமைக் கோலத்தையுந் திருமணக் கோலத்தையும் நினைந்து புனைந்துரைத்ததாகும் என்க.

(46-48) வலம்புரி அன்ன வால் நறும் கழுத்தொடும் - வலம் புரிச் சங்கை ஒத்த வெண்மையான நல்ல கழுத்தோடும், ஏற்றினத்து எருத்தின் முரிப்பு எடுத்ததன்ன குவவிப் புடைத்த பிடரினாலும் - சிறந்த ஏறுகளின் இனத்தைச்சேர்ந்த எருத்து மாட்டின் இமில் உயர்ந்தாற் போற் றிரண்டு பருத்த பிடரினாலும்;

திருமேனியெங்கும் நீறு பூசப்பட்டிருத்தலின் வெண்மை யான கழுத்தென்றார்; இனி, வான் நறுங் கழுத்து எனப்பிரித்து அழகிய நல்ல கழுத்தெனலுமாம்; அழகாவது சங்குபோல் வழுவழுப்பான வடிவுடையதாயிருத்தல்.

எடுத்தென்றது, இங்கு உயர்ந்தென்னும்பொருட்டு; காளையாந் தன்மைமிகுந்த இமிலேறு என்றற்கு ‘ஏற்றினத் தெருத்தின்' எனப்பட்டது.

‘பிட’ரென்பது,

(சிலப்பதிகார உரை,17).

புறங்கழுத்து, முரிப்பு

-

இமில்

(49-62) முழவு எனச் சரிந்து - மத்தளம் போற் சரிவுடைய தாய், வல் வலம் எனத் திரண்டு வலியதிரள் கல்லை ஒப்பத் திரட்சியுடைய தாய், வரை என நிமிர்ந்து - மலையைப்போல் உயர்ந்து, பின் எழு எனத் திணிந்து - பின்னும் இருப்புத் தூண்போல் திட்பம் வாய்ந்து, மலையொடு பொருத மால்களிறு

என்று புலவோர்கூறும் பொருண்மொழி காட்ட

-

மலையினொடு போர்செய்த பெரிய ஆண்யானை யென்று புலவர்கள் உரைக்கும் மெய்யுரைக்கு இலக்கியமாக, யானை என்னும் பால்நகு திருமொழி கொங்கை மருப்பின் நுங்கக் குத்தி ஒருபால் பெரும்போர் விளைப்ப தெய்வயானையென்று சொல்லப்படும் அமிழ்தத்தையும் இகழும் இன்சொல்லினை யுடைய அம்மையார் தமது கொம்பினால் முருகவேள் மார்பந் தன்னை விழுங்க அழுத்தி ஒருபக்கத்தில் மிகுந்த காதற்போர் செய்ய, ஒருபால் - மற்றொரு பக்கத்தில், வள்ளி யென்னும் கள் அவிழ் குழலாள்

காங்கையாகிய கூர்ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/246&oldid=1586990" இலிருந்து மீள்விக்கப்பட்டது