உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

  • மறைமலையம் - 20

என, உவமப் பொருளில் வந்தது.

‘அரக்கு’,சிவப்பு; உரு, நிறம்; “அரக்குண் பஞ்சிகள் திரட்டி (கனகமாலை, 8) என்னுஞ் சிந்தாமணியில் இச்சொல் இப் பொருட்டாதல் காண்க.

(37-39) எழும் இடம் குழிந்து -முதற்கண் எழுகின்ற இடத்திற் குழியாகி,விழுமிதின் ஒழுகி - சீரிதாக நீண்டு, தளவு அரும்பு என்ன வளம் கனிந்து இலங்கி - முல்லை அரும்பை ஒப்ப அழகு முதிர்ந்து விளங்கி, முன் எழு மூக்கின் தன்மையானும் முகம் எழும்பிய மூக்கின் றன்மையினாலும்;

-

வளம், அழகு; கனிதல், இங்கு முதிர்தல்' என்னும் பொருட்டு; “கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம்” என்னும் பரிபாடலில் (11,136) இச்சொல் இப்பொருளில் வந்தது.

-

(40-42) ஓர் அருள் கடல் இங்கு ஈர் உரு வாகிக் கரை புணர்ந்து கிடந்த முறைமைபோல ஓர் அருட்டன்மையுடைய கடலானது இங்கு இரண்டு உருவங்களாய்ப் பிரிந்து கரை பொருந்திக் கிடந்த வகைமைபோல புருவக்கொடி கடவாப் பெருவிழியானும் புருவமாகிய ஒழுங்கினைக் கடந்து

-

செல்லாது அமையும் பெரிய விழிகளாலும்,

‘அருட்கடல்' எனப்பட்டது, கண்களின் அருட்டன்மையை எண்ணி; உவமையைக் கருத்தூன்றுக.

கொடி

-

படர்கொடி, ஒழுங்கு என இருபொருளும் உரைத்துக் கொள்க; புருவத்தை நோக்கியவழி அவை படர் கொடியை யொத்திருந்தன; கண்ணாகிய கடலை நோக்கியவழி அவை அக் கடலுக்கு வகுத்த கரையொழுங்கை யொத்திருந்தன வென்க.

-

(43-45) விரைஅவிழ் தாமரை நறை உகுத்தென்ன மணம் விரிக்குஞ் செந்தாமரை மலர் தேன் சொரிந்தாற்போல, கேட்டொறும் இனிக்கும் பாட்டொடு தழீஇச் செழுவாய் மலர்ந்த மொழியினானும்-கேட்கும் போதெல்லாந் தெவிட்டாது சுவைக்கின்ற இசைகளுடன் சேர்ந்து அழகிய மலர்வாயின் கணிருந்து தோன்றுஞ் சொற்களாலும்;

பாட்டு, இசை; பிள்ளையாரது மலர்வாய்ப் பிறக்குஞ் சொற்கள் இசையினிமை வாய்ந்தன என்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/245&oldid=1586989" இலிருந்து மீள்விக்கப்பட்டது