உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

219

முடைய வல்ல வென்று, இலவு இதழ் புரையும் செந்நீர் இதழொடு மன்னுதலானும் - இலவமர மலரினிதழ்களை ஓக்குஞ் சிவந்த தன்மையையுடைய உதடுகளொடு பொருந்துதலானும்,

கொவ்வைப் பழத்தைக் கிள்ளை கோதுதலானும், பவழக்கல்லைக் கடைந்துதுளையிட்டு மகளிரணிதலானும் அவைபிள்ளையா ரிதழ்களுக்கு ஒப்பாகத் தகா; மற்று இலவமலரின் இதழோ அங்ஙனம் ஊறுபடுதலின்மையின் அதுவே அவரிதழுக்கு ஒப்பாகத் தக்கதென்றவாறு; “இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்ப” என்றார் சிலப்பதிகாரத்திலும் (14, 136). நீர்மை இயல்பாகிய குணம், “நின்னுடை நீர்மையும்” என்னுந் திருக்கோவையாரில் இச்சொல் இப்பொருட்டாதல் காண்க.

(31 - 36) முத்தக் கோவை முறைமுறை வைத்த நத்துவர்ச் செப்பு நன்கனம் திறந்தென முத்து மாலைகள் வரிசை வரிசையாய் வைக்கப்பட்ட நிறஞ் சிறந்த பவழச் சிமிழின் பொருத்து வாயானது அழகிதாகத் திறந்தாற்போலவும், அரக்கு உரு ஊட்டிய ஆம்பல் நறுமுகை தளை நெகிழ்ந்து அலர்ந்த தன்மைத்து என்ன - செந்நிறத்தைத் தோய்வித்த அல்லியின் நல்ல பூமொட்டானது கட்டு அவிழ்ந்து மலர்ந்த வியல்பினது போலவும், முள் எயிறு இலங்க -கூரிய பற்கள் ஒளிகாட்டி விளங்க, நகுதொறும் நகுதொறும் செவ்வாய் தோன்றும் அவ்வாற்றானும் - நகைக்கும்போது நகைக்கும் போதெல்லாம் அப்பெருமானது சிவந்த வாயானது விளங்கித் தெரியும் அவ்வகையினாலும்;

நகுதொறும் நகுதொறும் முள்ளெயிறு இலங்கச் செவ்வாய் தோன்றுமெனத் தொடரிசைத்துக் கொள்க. உவமைகளில் முன்னையது பற்களுக்கும் பின்னைய வாய்க்குமெனத் தெளியற்பாலன. ‘நத்துவர்' என்பதில் “ந ந சிறப்புப்பொரு ளுணர்த்துவதோரிடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல' என்றார் நச்சினார்க்கினியர் (சீவக சிந்தாமணி, 482).

99

-

30)

நன்கனம் -நன்றாக, அழகிதாக; "நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த என்புழி (மணிமேகலை, 2, இப்பொருட்டாதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/244&oldid=1586988" இலிருந்து மீள்விக்கப்பட்டது