உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் - 20

(21 - 23) நடுவில் குழிந்து வட்டித்து அமைந்த - புறத்தே நடுவிற் குழியாகி வட்டமா யமைந்த, படுபொன் கிண்ணம் செம்பொன்னாலான கிண்ணமானது, முகம் கவிழ்த்து அன்ன - முன்பக்கம் கவிழ்த்து வைத்தாற்போல, மோவாய் நிவந்த முறைமையானும் - வாயின் மோவாய் நடுவிற் சிறிது குழியாகிச் சுற்றி உயர்ந்துவிளங்கும் வகைமையாலும்,

வட்டித்தல், வட்டமாதல் “மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து” (புறம், 42). 'படுபொன் கிண்ண" மென்பதைப் 'பொன் படுகிண்ண’ மெனக் கொண்டு, 'பொன்னாற் செய்யப்பட்ட கிண்ணம்' எனப் பொருளுரைத்துக் கொள்க; 'நிவத்தல்’ உயர்தல்; ஆவது இங்கு எடுத்துத்தோன்றுதல்.

-

(24 27) கிளை அரி நாணல் கிழங்கு கப்புகள் அரியப்பட்ட நாணற்புல்லின் கிழங்கானது, மணற்கு ஈன்ற முளையும் - மணலின் கண் விட்ட வெள்ளிய முளையும், முருந்தும் - மயிலிறகினடியும், விளைநீர் முத்தமும் - கடல்நீரில் விளையும் வெண்முகத்துக்களும், கூர்ந்து நிரைந்து வல்லெரன ஒளிவிரிந்து எழுந்து ஒளிர் எயிற்றொடு பொருந்துத லானும் - கூர்மையாயும் வரிசையாயும் வலிமையாயும் அமைந்து வெளேலென்று ஒளிவிட்டு நின்று விளங்கும்பற்களோடு ஒன்றியமைதலானும்,

மேற் கப்புகளை யரிந்து நட்ட நாணற் கிழங்கு விரைவில் முளைவிடுதலாலும், அம்முளை கூர்மையாய் வெண்ணிறத்தவா யிருத்தலாலுங் “கிளையரி நாணற் கிழங்கு மணற் கீன்ற முளை உவமையாக எடுக்கப்பட்டது; இவ்வடி அகநானூற்றில் “தாவில் நன்பொன்” (212) என்னுஞ் செய்யுளிலிருந்தெடுத்த மேற்கோள்.

‘மணற்கு இதிற் குவ்வுருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்; நாணற் கிழங்கின் முளையும் முருந்தும் முத்தமும் முறையே வெண்மையிற் கூர்மைக்கும், வெண்மையில் வரிசைக்கும், வெண்மையில் வன்மைக்கும் உவமைகளென்க. ஈண்டு வரும் 'ஒடு' வுருபு ஒப்புமைப்பொருளதாகும்; இது சேனாவரைய ருரைறியற் காண்க (தொல்காப்பியம், சொல் 13).

(28-30) கொவ்வைக் கனியும் கொழுவிய பவழமும் சிவந்த கொவ்வைப் பழமும் செழுமையான செந்நிறம் அமைந்த பவழமும், செவ்விய அல்லென - தமக்கு நிகரான சிறந்த செந்நிற

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/243&oldid=1586987" இலிருந்து மீள்விக்கப்பட்டது