உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

217

தொங்கவிட்ட உத்தி யென்னும் அணிகலமானது பொறிகள் வாய்ந்த படத்தினையுடைய ஒரு சிறு நாகம்போற் றோன்றாநிற்க அந்நாகத்தின் தலைமேற் காணப்படுஞ் சிவந்த மாணிக்க மணியினை யொப்பத் தங்கி யிருத்தலானும்;

பிள்ளையாரது நெற்றிக்கண், அவரது நெற்றிமேற் றொங்கவிடப் பட்ட உத்தியென்னும் அணிகலத்தின் முனையிற் பதித்த மாணிக்க மணிபோற் சிவப்பாய் ஒளிர்ந்ததென்றும், அவ்வுத்தியாகிய அணிகலம் ஒரு சிறு நாகப்பாம்பினையும் அவ்வணிகலத்தின் முனையிற் பதித்த செம்மணி அந்நாகத்தின் உச்சிக்கண்ணதான மாணிக்கத்தினையும் ஒத்திருந்தனவென்றுங் கூறியபடி.

உத்தி - அணிகல (ஆபரண)த் தொங்கல் (திவாகரம்). துத்தி -பொறி (திவாகரம்). பை - படம் (பிங்கலந்தை).

-

(16 - 18) வெள் பனித் திரளை வெண்ணிறமான பனிக் கட்டியை, கண்ணுறப்போழ்ந்து - இடம் இடைப்படப் பிளந்து, துவர் நிறம் ஊட்டி - அதன்கட் சிவந்த நிறத்தையும் ஏற்றி,சிவணுற அமைத்தாங்கு - பொருத்தமுற அமைத்தாற் போல, இருபுறம் கதுப்பு மருவுதலானும் முகத்தின் இரண்டு பக்கங்களிலுங் கன்னங்கள அணைந்து தோன்றுதலாலும்;

-

‘போழ்ந்’தென்றது வெட்டுவாயிற் றோன்றும் பளபளப் பினை உவமித்தற்கென்று கொள்க. துவர் நிறம், செந்நிறம்; இதன்கண் எச்சவும்மை தொக்கது. 'துவர்’ சிவப்பு நிறத்தை யுணர்த்துதல் “துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடையோயே” (சிலப்பதிகாரம், 6, 26) என்பதிற் காண்க.

‘கதுப்’பென்றது கன்னங்களை (திவாகரம்).

(19-20) குழையொடு கெழுமும் தழை செவி இரண்டும் குண்டலங்களொடு பொருந்தும் வளர்ந்த காதுகள் இரண்டும், ஓ எனும் வடிவொடு மேவுதலானும் ஓ வெசன்னும் ஓங்கார வடிவத்துடன் அமைந்து விளங்குதலானும்;

-

குழை - குண்டலம்; “மின்னுக்குழையும் பொற்றோடும் மிளிர என்றார் சீவகசிந்தாமணியிலும் (16 58). ஓடுவுருபு அதனோடியைந்த ஒப்பலெராப்புரை” (தொல்காப்பியம், சொல், 75).

66

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/242&oldid=1586986" இலிருந்து மீள்விக்கப்பட்டது