உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் - 20

'துணர்ந்தாங்கு' என்பதில், ஆங்கு, அங்ஙனமே என்னும் பொருட்டு; துணர்ந்து கொத்தாக நெருங்கிவளர்ந்து; தூமருளிருள் துணர்ந்தனைய குஞ்சியன்' என்றார் சூளா மணியிலும் (குமாரகாலச் சருக்கம், 6).

கதுவல் - கவர்தல்; "பழனவாளைக தூஉம் ஊரன்' என்றார் குறுந்தொகையிலும் (8).

'சூழி' யென்பது உச்சிக்கொண்டை (பிங்கலந்தை); ‘பனிச்சை’ யென்பது பின்னி வளைத்து முடித்தலாம்; இஃது ஐவகை முடிப்புகளுள் ஒன்றென்க (திவாகரம்).

திருவது, செவ்விது, என்றாற்போல் ஈறுபெற்று வந்தது; “திருவத்தவர்” (நாலடியார், 57) எனப் பிறவாறும் வருதல் காண்க.

இப்பகுதி முருகக் கடவுளின் அழகிய தலைமயிர்ச் சிறப்பினைக் கூறி மகிழ்ந்தவாறாம்.

(10-12) செம்மணிப் பலகையின் - சிவந்த மாணிக்கக் கல்லாலாகிய ஒரு பலகையின்கண், அம்மணிகுயிற்றி - அழகிய நீலமணிகளை அழுத்தி, வரம்பு உற விடுத்த வண்ணம்போல அப்பலகையின் ஓரத்திற் பொருந்த அமைத்த வகைபோல, புருவக்கொடி படர்ந்த கருநிறமான புருவமென்னுங் கொடியானது ஓடிய, விரிநுதலானும்-அகன்ற நெற்றியினாலும்;

செம்மணி, மாணிக்கமணி, அது சிவந்திருததலின். அம்மணி அழகிய நீலமணி; 'மணி' என்னுஞ் சொல் தன்னியல்பில் நீலமணியினையே யுணர்த்தல் “மணி நீலமணியே” என்னுந் திவாகரத்திற் காண்க. அம் - அழகு (பிங்கலந்தை).

-

காண்க

குயிற்றி அழுத்தி; இஃதிப்பொருட்டாதல் "மரகத மணியொடு வயிரங் குயிற்றிய” என்புழிக் (சிலப்பதிகாரம், 5, 147, அடியார்க்கு நல்லாருரை).

செம்மணிப் பலகைக்குக் கருநிற வரம்பு அமையுங் காட்சி அழகிதாதல் நினைவுகூர்க. வண்ணம், வகை.

(13-15) அந்நுதல் கிளர்ந்த பொன்போல் செவ்விN அந்நெற்றியின்கண் எரியும் பொன் ஒத்த சிவந்த நெற்றிக் கண்ணானது, உத்தி என்னும் துத்திப் பை அரவு முடிமேல் மணி என பிள்ளையாரது நெற்றிமேல் உமைப் பிராட்டியார்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/241&oldid=1586985" இலிருந்து மீள்விக்கப்பட்டது