உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

22. எழில் நலங்கூறி நெஞ்சறிவுறுத்தல்

215

(1-9) வண்புனல் நிலையில் தண்அறல் போலவும் -வளமான நீர் நிலைகளின் அடியிற் காணப்படுங் குளிர்ந்த கருமணலை ஒப்பவும், தாமரை மொய்த்த வண்டினம் போலவும் - தாமரை மலர்களை மூசிய கரிய வண்டுக்கூட்டங்களை ஒப்பவும், பளிங்கில் தோய்ந்த நீல்நிறம் போலவும் ஒரு பளிக்குக் கண்ணாடியின்கண் ஊடுருவித் தோன்றுங் கருநீலநிறத்தை ஒப்பவும், திருமுக மருங்கின் வருமுறை துணர்ந்து திருமுகத்தின் பக்கத்தே ஒழுகி வரும் வகையில் அடர வளர்ந்து, ஆங்கு இடைஇடை சுழன்று நீண்டு கடை குழன்று அங்ஙனமே இடையிடையே சுழிந்து நீளமாய் வளர்ந்து நுனிசுருண்டு, கண் கதுவும் குஞ்சியை கண் ணாளியைக் கவருந் தலைமயிரினை; அன்னை இருபால் கூறிட்டு ஒருபால் சூழியும் மற்றொருபால் பனிச்சையும் திருவதின் அமைப்ப உமைப்பிராட்டியாரான தாயார் இருபிரிவாக வகுத்து ஒருபிரிவில் உச்சிக்கொண்டையும் மற்றொருபிரிவில் பின்னல் முடிப்புஞ் செவ்விதின் அமைப்ப, நறும்கதுப்பு ஒளிரும் பெரும் சிறப்பானும் அவ்வாற்றால் இனிய அத் தலைமயிர் மேன்மேலும் விளங்குகின்ற பெரிய மேன்மையினாலும்;

ஒளி

-

புனல் நிலை, நீர்நிலைகள்; அவை 'வண்புனல்நிலை யெனப்பட்டமையின், என்றும் அறாத வளமான நீரொழுக்கும் நீர்ப்பெருக்கும் உடைய ஆறுகளின் மடுக்கள் வாவிகள் முதலான நீர்நிலைகளே ஈண்டுக் கொள்ளப்படும்; அவற்றின்கீழ்

பை

யிடையே கருமணற் பரப்புகள் காணப்படுதலும் இங்கு நினைவுகூரற்பாற்று.

புனலும் பளிங்கும் முகத்தின் தெளிவுக்குந், தாமரை முகத்தின் செவ்விய வடிவுக்கும், அறலும் வண்டினமும் நீனிறமும் அத் திருமுகத்தின் பக்கலிற் சரிந்துகிடக்குந் தலைமயிருக்கும் உவமைகளாய் நின்றன.

‘குஞ்சி’, ஆண்பான் மயிர்; மேற் கதுப்பென வருதலும் அது. இடையிடை சுரிந்து நீண்டு கடை குழலலுங் கண்ணொளியைக் கவருமாறு கருமையிற் பளபளப்புடைமையும் அழகிய தலைமயிரின் இயல்பாகும்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/240&oldid=1586984" இலிருந்து மீள்விக்கப்பட்டது