உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் 20

-

21. அருணிலை யுரைத்தல்

“உணர்ந்தா ரறிவினுந் தோன்றா தொளிக்கு மொருமுருக னிணர்ந்தார் சுரிகுழன் மங்கைய ரோடென் னிருவிழியிற் புணர்ந்தா ரெயிலொற்றி மேவிய வாறு புனிறுசெல்லா வணந்தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மையன்றே”

ள்) உணர்ந்தார் அறிவினும் தோன்றாது ஒளிக்கும் ஒரு முருகன் - தான் முழுமுதற் கடவுளாந் தன்மையை உணர்ந்தவ ரறிவினுக்கும் வெளிப்படாமல் ஒளிக்கும் ஒப்பற்ற முருகப்பிரான், இணர்ந்துஆர் சுரிகுழல் மங்கையரோடு என் இருவிழியில் புணர்ந்து நெருங்கி நிறைந்த சுருண்ட கூந்தல்களையுடை

வள்ளி

-

-

தெய்வயானையென்னும் அம்மையர் பாகராய் எழுந்தருளிவந்து என் இரண்டு கண்களிலுங் கலந்தவராய், எயில் ஒற்றி மேவியவாறு மதில்கள் உயர்ந்த திருவொற்றிநகரைச் சேர்ந்தவகை, புனிறு செல்லா வணம் தாழ் குழவியைத் தாய்சென்று புல்லிய வண்மை யன்றே ஈன்றணிமை கழியாத பச்சிளந்தன்மை பொருந்திய குழந்தையைத் தாயே விரும்பிச் சென்று தழுவிய அருட்டன்மையேயாமன்றோ; என்பது.

-

கடவுளின் உண்மையுணர்ந்தாலும் அவனை மெய்யன்பாற் கரைந்துருகி வழிபடாதார்க்கு அவன் நேரே தோன்றா தொளிந்திருந்தே அருள்புரிவனாகலின், “உணர்ந்தா ரறிவினுந் தோன்றாதொளிக்கு மொரு முருகன்” என்றார்; "உணர்ந்தார்க் குணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன்” என்னுந் திருக்கோவையாருரையும் இக்கருத்தே பற்றி வந்தது.

இணர்ந்து - நெருங்கி; “இணரிய ஞாட்பினுள்” என்றார் களவழியிலும் (34).

உணர்ந்தாரறிவினுந் தோன்றாதொளிக்கும் ஒருமுருகன் ஏதுமறியா ஏழையேன் இருவிழியிற் புணர்ந்தாரென்று தம்மைத் தாழ்த்துரைத்தல் கருதிப், ‘புனிறுசெல்லா வணம் தாழ் குழவி' யென்று குழவியை ஏதுமறியாப் புனிற்றணிமைப் பருவத்தில் வைத்து விதந்தருளினார். குழந்தையைத் தாய் சென்று புல்லிய வண்மையை இங்கு உவமையாகக் கொள்க. வண்மையை ஒப்பதன்றே யென்று உரைத்துக்கொள்க. (21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/239&oldid=1586983" இலிருந்து மீள்விக்கப்பட்டது