உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

213

தீயென் நின்நினைவருந் திருவடி (115) யாங்ஙனம் பெறுவெனோ (122) என்று அவனது அருள்நிலை பெறுதல் அரிதெனக் கூறியவாறு.

20. தோழி கிள்ளையைத் தூதுவேண்டல்

“மொழியுங் குழற முழுவுடம்பும் பைத்து

விழியுந் துயில்கூடா வெய்யோன் - பழியைத் திருவொற்றிச் சேயோற் குரையாய் கிளியே யுருவுன்னை யொப்ப துணர்ந்து.”

-

-

-

இ-ள்) மொழியும் குழற சொல்லும் தடுமாற, முழு உடம்பும் பைத்து முழுஉடம்பும் பசந்து, விழியும் துயில் கூட ா வெய்யோள் - தன்னை விரும்பிய என் அருமைத் தலைவியின் கண்களுந் தூக்கம் பொருந்தா; பழியை ஊரவர் அலருக்கு ஏதுவான அடக்குதற்கரிய இத்துயர நிலைகளை, திருவொற்றிச் சேயோற்கு உரையாய் - திருவொற்றி முருகற்கு எடுத்துச் சொல்வாயாக, கிளியே உரு உன்னை ஒப்பது உணர்ந்து அருமைக் கிளியே! தெளிவின்றிச் சொல்லாடலாலும் முழு வுடம்பும் பசந்து நிற்றலாலுங் கண்ணிமைகள் துயில் கூடாமையாலும் என் தலைவியின் உருவும் உன்னையே ஒத்து உனக்கு இனமாதல் உணர்ந்து என்பது;

'உணர்ந்து உரையாய்' எனக் கொள்க.

-

‘பைத்து’பசுமை என்பதனடியாகப் பிறந்த வினையெச்சம்; ‘பை’ என்பதே பச்சைநிறத்தை யுணர்த்தும் என்னும் பிங்கலந்தை. முருகப்பிரானை விரும்பி நின்றாளாகலின், தலைவி வெய்யோளெனப் பட்டாள்; வெம்மை, விருப்பம்; அன்றிக் காதல் வெப்பம் உடையாள் எனினும் பொருந்தும்; அங்ஙனமாயின் அச் சொல்லுக்கு 'வெப்ப'மெனப் பொருள் கூறிக்கொள்க.

னி

இனி இவ்விரண்டு பொருள்களுமே இங்குப் பொருந்து மாகலின் அதனை இரட்டுற மொழிந்து கொள்ளலுமாம்.

கிள்ளை தூதுபோதற்கு இயையுமெனக் காரணங் கற்பித்த திறம் இதன்கண் மிக அழகிதாதல் கண்டு மகிழ்தல்வேண்டும் (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/238&oldid=1586982" இலிருந்து மீள்விக்கப்பட்டது