உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 20

'காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” என்னும் குறுந்தொகைச் செய்யுளிற் போல (2).

நின் நினைவருந் திருவடி (115) அன்புருவாகு நின் தொண்டர் போல அன்பில் நிலைநின்று (120-1) யாங்ஙனம் பெறுவெனோ (122) எனக் கூட்டுக.

‘உறைத்தல்’, துளித்தல்; இச்சொல் இப்பொருட்டாதல் “தெண்பனி யுறைக்குங் கால்” என்னுங் கலித்தொகையால் (15) தெளியப்படும்.

எனக்

பனித்தல் நடுங்குதல்; “நரை முக வூகம் பார்ப்பொடு பனிப்ப” குறுந்தொகைச் செய்யுளில் (249)

இப்பொருட்டாய் வருதல் காண்க.

ச்சொல்

‘கவர்தல்', பலவேறாகப் பிரிவுபடல்; “அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்ட” (புறநானூறு, 35) என்புழிப் போல.

விழிநீருறைத்தலும் மெய்பனித்தலும் உரை குழறலும் அறிவும் ஏனை உட்கருவிகளும் ஒரு வரி நிகழ்தலுமெல்லாம் அன்புருவாகுந் தொண்டர்கட்கு அடையாளமாகு மென்பது. “மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் றவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே”

என்னும் மணிவாசகப் பெருமானது திருவாசகத் தேனுரையின் கண் (திருச்சதகம், 1) இனிது விளங்குதல் காண்க. பாங்கு - உரிமை (திவாகரம்); நின்றிருவடிகளைப் பெறுதற் குரிமை யில்லாத எளியனேன் அதனைப் பெறுதற் குரிமையுடையனாமாறு கூறுவீராக என்றவாறு. (19)

எனவே, ‘இளையோய் (9) பெரியோய்' (17) என எல்லாம் வல்ல இறைவனை விளித்துச் ‘சூர்’ முதல்போலப் பேரன்பில்லேன் (51) கீரன்போல (61) ஆற்றுப்படை சொலும் ஆற்றலு மில்லேன் (66) தானே தனக்கு நிகரென விளங்கிய நச்சினார்க்கினியனு மல்லேன் (73-4) அருணகிரியெனும் பெரியனு மல்லேன் (82) நாராயண னெனுங் குருவனு மல்லேன் (88) சோமசுந்தர குருவனு மல்லேன் (108)அறந் திறம் புளியிற் சிறந்தனென் மன் (114) இனைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/237&oldid=1586981" இலிருந்து மீள்விக்கப்பட்டது