உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

211

'திறம்பு உளி' திறம்பும் இடத்து; உளி இடத்து என ஏழனுருபிணன் பொருளில் வந்தது; “இயல்புளிக் கோலோச்சும்’ என்னுந் திருக்குறளிற்போல (545) “உளி மூன்றாவதன் பொருள் படுவதோர் இடைச்சொல்” என்ற பரிமேலழகியாருரையை மறுத்து நச்சினார்க்கினியர் “மந்திர விதியின் மரபுளிவழா' என்புழி முறைமையின் வழுவாத அந்தணரென ஐந்தாவது விரிதலானும், 'இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்’ என்புழி முறைமையிலே செங்கோல் நடாத்தும் என ஏழனுருபு விரிதலானும் உளி யென்பது மூன்றனுருபின் பொருள்பட வந்ததன்று.” எனக் கூறுமுரை நினைவிற் பதிக்கற்பாற்று.

‘சிறந்தனென்' என்பதில் என் தன்மை யொருமை வினைமுற்று விகுதி (தொல்காப்பியம், வினையியல், 6).

அறந்திறம்பா நெறியிற் சிறந்து நிற்கவேண்டுவதாயிருக்க அது செய்திலேன் என ஒழிந்த பொருளை யுணர்த்துதலின் ‘மன்’ ஒழியிசைக்கண் வந்தது.

-

(115-122) இனைய தீயென் நின் நினைவரும் திருவடி - இத்தகைய தீமையுடையேன் தேவரீருடைய நினைத்தற்கெட்டாத் திருவடிகளை, விழிநீர் உறைப்ப - கண்ணீர் துளிப்ப, முழுமெயும் பனிப்ப - முழு உடம்பும் நடுங்க, நிரை நிரை வாராது உரை நனி குழற முறை முறையேவராமற் பேச்சுகள் மிகவுந் தலைதடுமாறி வர, பொறிவழி அறிவும் செறியும் உட்கருவியும் பலவழிக் கவராது ஒருவழிநிகழ - மெய்வாய் முதலிய ஐம்பொறிகளின் வழியே அறிவும் அவ் வைம்பொறிகளொடு நெருக்கமுறும் மனம் முதலிய அகக் கருவிகளும் பலவழியாகப் பிரிந்து போகாமல் ஒரேவழியாய் நிகழ, அன்பு உருவாகும் நின் தொண்டர் போல- அன்பின் உருவமாய் அமையுந் தேவரின் திருத்தொண்டர்களை ஒப்ப,நீங்கா அன்பில் நிலைநின்று - அறாத பேரன்பில் உறுதியாய் நிலைத்து, யாங்ஙனம் பெறுவெனோ பாங்குபடமொழிமோ - எங்ஙனம் அடைவேனோ உரிமையுண்டாகக் கூறுவீராக வென்பது.

-

ச்செய்யுள் ஆண்டவனையே விளித்துத் தமது தாழ்நிலை கூறுமுகத்தால், அவரது அருள்நிலை பெறுதல் அரிதெனக் கூறிய வாறாம். 'மொழிமோ' வென்பதில் 'மோ' முன்னிலை யசைச்சொல் (தொல்காப்பியம், இடைச்சொல்லியல், 26);

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/236&oldid=1586980" இலிருந்து மீள்விக்கப்பட்டது