உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் - 20

(115-116) கற்றைத் தோகை மயின்மேலிருந்து பயிலுதலானும் கற்றையா யிருக்கும் பீலியினை யுடைய மயிலின்மேல் எழுந்தருளியிருந்து பலகாலும் விளங்குதலாலும்;

66

‘பயிலுத’ லென்பது பலகால் நிகழ்ச்சியினை யுணர்த்தல் கரப்பிலுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி' (புறம், 34) யென்னுமிடத்துப் “பலகாற் கூறி" யெனவரும் பழைய உரைகொண்டு இச்சொற்கு இப்பொருளுண்மை தெளியப்படும்.

(117-118) காண்டொறும் இனிக்கும் காட்சியும் உடையன் பார்க்கும்போதெல்லாம் மகிழ்வைத் தருகின்ற தோற்றமும் உள்ளவன்; உரைப்பத் தீராச் சிறப்பும் உடையன் - சொல்லி முடியாப் பெருமையும் உள்ளவன்;

உரைப்பத் தீராச் சிறப்பென்பது, எவ்வளவு சொன்னாலும் முடிதலில்லாத பெருமையென்க. 'உம்மை’, எச்சம்;

-

-

(119-123) தம் உயிர்க்கு இனிய செம்மொழிப் புதல்வரை நோக்க நோக்க தமது உயிர்க்கினிய இன்சொற் புதல்வர்களைப் பார்க்கப் பார்க்க, மீக் கிளர் காதல் தந்தையர்க்கு எழுதல்போல் - மேன்மேன் மிகுகின்ற அன்பு தந்தைமார்க்கு விளைதல்போல, கண்டிடும் விழி அளவு அமையாக் கழிபெரும் காதல் - தன்னைக் காணுங் கண்களின் அளவில் அமையாத நிறைந்த பேரன்பினை, எய்தினார்க்கு உறுக்கும் செய்தியும் உடையன் தன்னை அணுகிக்காணும் பேறுபெற்ற அடியார்கட்கு விளைக்குஞ் செய்கையுமுள்ளவன்;

-

‘செம்மொழி' யென்புழிச் ‘செம்மை' யென்பது இங்குத் தந்தையர்க்கு னிதாகுந் தன்மையைக் குறியாநின்றது. ‘உறுக்கும்’ உண்டாக்கும்.

(124 - 125) உருகெழு தோற்றம் மருவுவன் என்று - அச்சம் பொருந்திய தோற்றத்தை மேற்கொள்வனோ என நினைந்து, வெருவரல் ஒழிதி இன்றே - நின் அஞ்சுதலை ஒழிப்பாயாக இப்பொழுதே;

உரு - அச்சம், “உரு உட்காகும்” (தொல்காப்பியம், உரியியல், 4); இறைவன் தன் அடியார் அஞ்சுதற்கேதுவான தன் றெய்வ வடிவைக் காட்டாது அவர் கண்டு மகிழ்தற்குத்தக்க அழகிய இளவடிவினையே காட்டி அருள் செய்வனென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/255&oldid=1586999" இலிருந்து மீள்விக்கப்பட்டது