உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை "அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத் திளநலங்காட்டி”

231

என்னுந் திருமுருகாற்றுப்படை அடிகளால் (289-290) அறியப் படும்.வெருவரல் - அஞ்சுதல், (திருமுருகாற்றுப்படை, 241). 'ஆல்'

அசை.

(125-128) முருகன் குழவிக் கோலத்தும் விழுமிதின் அமர்வன் - முருகப்பெருமான் குழந்தை யுருவத்திலுஞ் சிறந்து திகழ்வன்; மடவான் மகளிர் தடமுலை குழைக்கும் இளமைக் கோலத்தும் வளமையொடு பொலிவன் - மடப்பத்தினையுடைய பெண்களின் பெரிய கொங்கைகளைக் குழையும்படி செய்யுங் காளைப் பருவத்திலுஞ் செல்வப் பொலிவுடன் விளங்குவன்; அதனான் அதனால்;

-

-

‘மடவரல் மகளிர்’ ‘மடப்பத்தினையுடைய மகளிர்' எனப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர் (நெடுநல்வாடையுரை,39).

(129-135) மின் எனத் தோன்றிக் கொன்னுற மறைந்தும் மின்னல்போற்காணப்பட்டுப் பயனில்லாமற் கழிந்தும், வாதுவன் நடவாக் கலிமா போலத் தீதுஉறு நெறியில் திறம்படச் சென்றும்- குதிரைப் பாகனால் நடத்தப்படாத செருக்குமிக்க குதிரையைப் போல் தீமை மிகுக்கும் வழியில் திறமையாக ஓடியும், பாகு அடு களிற்றின் பண்புபோல உறுதிகொள்ளாச் சிறுமையின் மிகுந்தும் -யானைப் பாகனைக் கொன்று நெறிப்படாது மீறும் யானையின் இயல்பைப் போல் ஒரு நன்மையை மேற்கொண்டொழுக மாட்டாக் கீழ்மையில் மிகுதிப்பட்டும், ஒருவழி நிலையாது ஓடிப் பலவழிக்கவர்க்கும் என் நிலைமை இல் மனனே - ஒரு முறையிலும் நிலைப்பதில்லாமல் ஓடிப் பலவகையிலும் பிளவுபட்டொழுகு கின்ற எனது நிலைத்தலில்லாத நெஞ்சமே யென்பது.

மனனே என்பதன் ஏகாரம் விளி; 'மின்' திடுமெனத் தோன்றதலுக்கு உவமை; ‘கொன்' பயனின்மைப் பொருளது; “கொன்னே வழங்கான்' (நாலடியார், 1, 9,) என்புழிப்போல.

வாதுவன், குதிரை ஓட்டுவோன் (திவாரகம்). 'கலி’, இங்குச் செருக்கினை உணர்த்தும் (புறம். 15).

பாகு,பாகன், (சிலப்பதிகாரம், 15, 46). சிறுமையின், சிறுமை யின்கண்; கவர்த்தல், பிளவு படுதல் (புறம், 35). ஆவது, ஒரே நினை வாயில்லாமற் பல நினைவுகளுடையதாதலைக் கூறியவாறாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/256&oldid=1587000" இலிருந்து மீள்விக்கப்பட்டது