உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் - 20

மனனே (135) அதனான் (128) வெருவர லொழிதியால் (125) என முடிக்க.

எனவே, மனனே (135) எனத் தலைவி தனது நெஞ்சத்தை விளித்து, நறுங் கதுப்பொளிரும் பெருஞ் சிறப்பானும் (9) விரிநுத லானும் (12) முடிமேன் மணி எனக் குடிகொளலானும் (15) கதுப்பு மருவுதலானும் (18) ஓவெனும் வடிவொடு மேவுதலானும் (20) மோவாய் நிவந்த முறைமையானும் (23) எயிற்றொடு பொருந்து தலானும் (27) இதழொடு மன்னுதலானும் (30) செவ்வாய் தோன்று மவ்வாற்றானும் (36) மூக்கின் றன்மையானும் (39) பெருவிழியானும் (42) மொழியினானும் (45) பிடரினானும் (48) தோளினானும் (62) வரிமூன்றொழுகிய திருவினானும் (69) வேலினானும் (73) வயிற்றினானும் (77) குறங்கினானும் (82) திருவடியானும் (89) மயின்மேலிருந்து பயிலுதலானும் (116) காட்சியுமுடையன் (117) சிறப்பு முடையன் (118) செய்தியும் உடையன் (123) தோற்றம் மருவுவன் என்று (124) தன் தலைவனாகிய திருவொற்றிச் செவ்வேளின் எழில் நலங்கள் கூறிக், குழவிக் கோலத்தும், அமர்வன் (126) இளமைக் கோலத்தும் பொலிவன தனான் (128) என்றும் அவன் குழவிக்கோலத்திலேயே இருப்ப வனல்லன்; அவன் கட்டிளமைக் கோலத்தின் கண்ணும் பொலிந்து நம்பால் அணுகி நங் காதற்றுயரத்தையுங் கட்டாயந் தீர்ப்பான் காண் எனத் துணிவு விளக்கி, வெருவரல் ஒழிதியால் இன்றே (125) என அறிவுறுத்தியவாறு தெளியற்பாலது. எனவே இச்செய்யுள் எழில் நலங் கூறி நெஞ்சறிவுறுத்தற்கண் வந்தமை காண்க வென்பது. (22)

23. அருடர வேண்டல்

"மன்னு மொருயானை யூட மறுயானை தன்னுதவி வள்ளி தடமுலைக -டுன்னுவிப்ப வொற்றி நகர்வைகும் வோலோ யொருபெரிதோ பற்றி யெனையாள் பரிசு

இ-ள்). மன்னும் ஒரு யானை ஊட - தனக்கு ஒரு கூறாய்ப் பொருந்துந் தெய்வயானை என்னும் ஒருத்தி தன்னுடன் ஊடுதல் செய்யும்படி, மறுயானை தன் உதவி - தனக்கு முன்னோனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/257&oldid=1587001" இலிருந்து மீள்விக்கப்பட்டது