உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

233

யானை முகக்கடவுளினது அருளுதவியானது,வள்ளிதடமுலைகள் துன்னுவிப்ப - வள்ளியம்மையாரின் பெருத்த கொங்கைகளைப் பொருந்துவிப்ப, ஒற்றி நகர் வைகும் வேலோய் - இத்தகைய காதல் ளையாட்டுகளுடன் திருவொற்றி நகரில் எழுந்தருளியிருக்கும் வேற்படையை யுடைய முருகப்பெருமானே, ஒருபெரிதோ பற்றி எனை ஆள் பரிசு - அணுகி ஏழையேனை ஆண்டருளுந் தன்மை தேவரீருக்கு ஒரு பெரிதாகுமோ வென்பது.

யானை முகக் கடவுள் இங்கு 'யானை' யெனப்பட்டார்; அவர், தம் இளவலாகிய ஆறுமுகக் கடவுளுக்கு வள்ளியம்மையை மணங் கூட்டிவைத்த வரலாறு கந்த புராணத்து 'வள்ளியம்மை திருமணப் படலத்தில்’110-வது செய்யுளிலிருந்து 115-வது செய்யுள் வரையிற் கூறப்படுதல் காண்க.

பரிசு - பண்பு, தன்மை (திவாகரம்); "போரும் பரிசு புகன் றனரோ” என்றார் திருக்கோவையாரிலும் (182).

24.தோழி தலைவி குறிப்பறிதல்

“பரிசு பிறிதொன் றறியேன் பருமுத்தப் பைம்பணைசூழ் லிரிபுக ழொற்றி வருவேலர் போலும் விடைக்களிறொன் றரிதிற் பெயர்ந்திங்கு வந்ததுண் டோவென்ப ரங்குசெல்வர் தெரிவிற் பெரியர் செயலோ சிறியரெஞ் சேயிழையே.’

-

இ-ள்) பரிசு பிறிது ஒன்று அறியேன் உண்மை வகை வேறொன்றுந் தெரிந்திலேன், பருமுத்துப் பைம் பணைசூழ் விரிபுகழ் ஒற்றி வருவேலர் போலும் பருமையான முத்தங்கள் உள்ள பசியவயல்கள் சூழ்ந்த பரந்த புகழினையுடைய திருவொற்றி நகரின்கண் எழுந்தருளி விளங்கிவரும் வேலவர் போலும் இங்குவந்து என்னை வினாவியவர், விடைக்களிறு ஒன்று - ஆ - ஆண் யானையொன்று, அரிதின் பெயர்ந்து இங்கு வந்தது உண்டோ என்பர்-எய்த என் அம்பினுக்கு அருமையாகத் ா தப்பி யோடி இப்பக்கம் வந்ததுண்டோவென என்னை வினவுவர், தப்பியோடி அங்கு செல்வர் - யான் இல்லை யெனவே அப்பக்கம் போவர், தெரிவில் பெரியர் செயலோ சிறியர் - அவர் அறிவிற் பெரியரா யிருந்தும் அடுத்தடுத்துப் போந்து அங்ஙனம் வினவுஞ் செயலிற் சிறியராயு மிருக்கின்றார்; எம் சேய் இழையே செவ்விய நகைகளை யணிந்த எம் தலைவியே என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/258&oldid=1587002" இலிருந்து மீள்விக்கப்பட்டது