உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

❖ - 20❖ மறைமலையம் – 20

இங்குக் கூறப்படும் முத்தம் வயல்களில் விளையும் முத்தமென்க.

இங்ஙனமெல்லாங் கூறுங்கால் தலைவிக்கு நெஞ்சங் கடுத்தது காட்டும் வெளிக்குறிப்புகள் கொண்டு தோழி அவளது காதற்கருத்தைத் தெரிந்துகொள்வள். இங்ஙனங் கூறிக் குறிப்பறியு மியல்பு ருங்களியாயின்றியா னிறுமாப்ப" னிறுமாப்ப” என்னுந் திருச்சிற்றம்பலக் கோவையாரினாலும் (52) உணரப்படும்.

66

25. கழற்றெதிர்மறை

தெரிவு, அறிவு; இப்பொருட்டாதல் “தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்” என்னுஞ் சிலப்பதிகாரத்திற் காண்க. (30,185).

-

(1-15) இழை நெகிழ் பருவரல் எய்திய மகளிரின் தாம் அணிந்த அணிகலங்களைக் கழலச் செய்தற்கு ஏதுவான தங் காதலர்ப் பிரிந்த துன்பமுறும் மகளிரைப்போல், மழைத்தடம் தோள்கள் இளைத்துத் தோன்ற - குளிர்ச்சி பொருந்திய பெரிய தோள்கள் மெலிந்து தோன்றவும், பால் கடல்போலத் தூத்தகப் பரந்த நூல்படு கேள்வியும் சீர்ப்படாது ஒழிய - பாற்கடலைப் போல் தூய்மைப்படவிரிந்த நூலாராய்ச்சியின் கண் அடிப்படு கின்ற நினது கேள்வியறிவும் செம்மைப் படாமல் தவறி யொழியவும், சிறுநெறிச்செல்லும் அறியா மாந்தரும் நல்வழிச் செல்லத் தெள்ளிதின் காட்டும் இழுக்கா நடையும் வழுக்கிப் போக - சிறுமையான தீயவழிகளிலே ஒழுகும் நன்மை யறியா மக்களும் நல்ல வழியிலே திருந்தி யொழுகும்படியாக அத்துணை விளங்கக் காட்டும் நினது பழுதுபடாத ஒழுக்கமும் வழுவிப் போகவும், இந்நிலை நீயும் திரியின் - இத்தகைய இழிநிலையில் நீயும் நிலைதிரிவதனால், பின் அதற்குமேல், ஒரு பௌவநீர் வெதும்பின் வளாவுநீர் உண்டோ ஒரு கடல்நீர் வெப்பங் காள்வதனால் அதனை வளாவுகின்ற அதனினுங் குளிர்ந்த பெருநீரும் வேறு உண்டோ? இல்லையே; குன்று நிலைதவறிப் பந்துபோல் உருளில் சென்று வழி அடைக்கும் குன்றியும் உண்டோ - ஒரு மலையே தன் இருப்பினின்றும் பிறழ்ந்து பந்து போல் உருண்டு ஓடுமானால் அதனை அதன் எதிரிற்சென்று வழியடைத்து நிலைப்பிக்குஞ் சிறிய குன்றிமணிதானும் உண்டோ? இல்லையே; கடும் களிற்று ஒருத்தல் தொடு மடுத்து உண்ணின் முருங்காது ஓம்பும் பெருங்கலம் உண்டோ - வலிய ஆண்யானை

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/259&oldid=1587003" இலிருந்து மீள்விக்கப்பட்டது