உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

235

ஒன்று வயலின் உட்புகுந்து உணவு கொள்ளுமானால் அஃத ழியாதபடி பாதுகாக்கும் பெரிய மூடுகலம் ஒன்று உண்டோ? ல்லையே; என்று பல கூறி நின்று என்று பல அறிவுரை களெல்லாம் எனக்குக் கூறிநின்று, எனை நெருங்கி நன்மை நாடிய என் உயிர் நண்பா - என்னைக் கழறி என் நன்மையை விரும்பிய என் உயிர் நண்பனே என்பது.

பிரிவாற்றாத் துன்பம் மகளிரை மெலிவித்தலின் இதற்கு முன் அவருறுப்புகளில் இறுக்கமாயிருந்த அணிகலன்கள் நெகிழ்தல் பற்றி 'இழை நெகிழ் பருவரல் எய்திய மகளிரின்' என்றார்.

பருவரல், துன்பம்; தூ, தூய்மை; தூத்தக, தூய்மைப்பட; நீயும் என்னும் உம்மை உயர்வு.

வளாவு நீருண்டோ, குன்றியுமுண்டோ, பெருங்கல முண்டோ வென்றது, பாங்கன் தலைமகனைப் பார்த்து, 'எல்லா முணர்ந்தொழுகும் பெரியையாகிய நீயே நிலைதவறி நின்றால் நின்னிற் சிறியராகிய ஏனையோருள் நின்னைத் திருத்துவாரும் உளர்கொல்' என்று அறிவுறுத்துங் குறிப்புத் தோன்றுதற் பொருட்டு. இவை இங்ஙனமே,

குன்றம் உருண்டாற் குன்றி வழியடை யாகாதவாறு போலவும், யானைதொடு உண்ணின் மூடுங் கலம் இல்லது போலவும், கடல் வெதும்பின் வளாவுநீர் இல்லது போலவும் எம்பெருமான் நின் உள்ளம் அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடியின் வரைத்தன்றிக் கைமிக் கோடுமே யெனின் நின்னைத் தெருட்டற் பால நீர்மையர் உளரோ நீ பிறரைத்தெருட்டினல்லது

என இறையனாரகப்பொருள் (3-ம் நூற்பா) உரையிலும் ஆசிரியர் நக்கீரர் மிகவும் அழகாக உரைத்திருத்தல் நினைவு கூரற்பாலது.

ஒருத்தல்', யானை முதலிய விலங்குகளின் ஆணுக்குப் பெயர். இப்பொருள்.

“புல்வாய் புலியுழை மரையே கவரி

சொல்லிய கராமோ டொருத்த லொன்றும்

வார்கோட் டியானையும் பன்றியு மன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/260&oldid=1587004" இலிருந்து மீள்விக்கப்பட்டது