உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் - 20

என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களால் (மரபியல், 35, 6) உணரப்படும். களிறுக்குக் கடுமையாவது வலிமை; 'கடுமை', வலிமை;

தொடு’, வயல்; “மருத நிலமும்

தொடுவெனலாகும்' ங்

(10:656) என்பது பிங்கலந்தை. யானை யென்னுங் குறிப்பால் வ்வயலைக் கரும்பு விளை வயல் எனல் ஒக்கும்.

‘முருங்கல்’, அழிதல்; குன்றியும், இதன் உம்மை எதிர்மறை.

'நெருங்கி' யென்றது, இங்கு அருகில் நின்றென்பதன்று, இடித்துரைத்து அல்லது கழறி என்னும் பொருட்டு; தொல் காப்பியங், கற்பியலில் (150) “பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி” என்புழி நெருங்கி என்பதற்கு நச்சினார்க்கினியர் 'கழறி' எனப் பொருளுரைத்ததூஉங் காண்க.

(16-17) மறி இளம் கன்று - மான் கன்றுகள், முறி உணும் தாயொடு - தளிரிலைகளைக் கறித்துத் தின்னுந் தத்தந் தாயுடன், குழைப் புதல்தோறும் இளந்தளிர்கள் நிறைந்துள்ள சிறு தூறுகளிலெல்லாம், குழீஇ உகள கூடித் துள்ளித்துள்ளிப் பாய்தலாலும்;

-

-

மறி என்பது மானுக்கும் பெயராதல் “யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும், ஓடும்புல்வாய் உளப்பட மறியே” என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்திற் (12) காண்க.

ரு

புதல், சிறு தூறுகள்; பைம்புதல் எருக்கி (25) என்பது முல்லைப்பாட்டு, 'குழீஇ' அளபெடை, இங்குச்சொல்லிசை; உகள், உகளலாலுமெனக் காரணப்பொரு ளுரைக்க; மேல் வருவனவெல்லாமும் இங்ஙனமே உரைக்கற்பாலன. உகளல் துள்ளல், “திரிமருப்பிரலை புல்லருந் துகௗ” என்றார் அக நானூற்றிலும் (14).

(18–19) வரையாடு வருடை இடைவாய் தாண்டி-மலைகளில் விளையாடுகின்ற 'வருடை’ யென்னும் ஒருவகை மான் இனம் அங்குள்ள மலைப்பிளவுகளைத் தாண்டி, உள்ளம் செருக்கித் துள்ளித் திரிதர - உள்ளம் எழுச்சிகொண்டு குதித்து உலாவு தலாலும்;

66

‘வருடை’ இது 'வருடைமான்' என ஒருவகை மான். இது வரையாடு வருடைத் தோற்றம் போல" (139) என இங்ஙனமே வரும் பட்டினப்பாலையடியின் உரையால் இனிதறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/261&oldid=1587005" இலிருந்து மீள்விக்கப்பட்டது