உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

237

‘செருக்குதல்’, இங்கு 'எழுச்சிகொள்ளுதல்' எனக்கொள்க. திரிதரும் வேறொருவகை

மலைகளில்

மானினங்கள் மகிழ்ச்சியால் மலைவெடிப்புகளைத் தாண்டி விளையாடுதல் இங்குக் குறிக்கப்பட்டது.

-

(20-21) நிலம்தொட்டு வீழ்ந்த குலுங்கு மயிர்க் கவரி நிலத்திற் பட்டுக் கீழ்த்தொங்கிய குலுங்குகின்ற மயிர்க்கற்றையை யுடைய ‘கவரிமா' வென்னும் ஒருவகை விலங்கினங்கள், மெல் மெல அசைஇ மேதகச் செல்ல மெல்ல மெல்ல அசைந்து நடந்து பெருமைப்பட ஏகுதலாலும்;

(22-23) முளவுமா தொலைச்சிய வன்கண் கானவர் - முள்ளம் பன்றிகளைக் கொன்ற வன்கண்மை மிக்க வேட்டுவர், ஞெலிகோல் பொத்திய நெருப்பில் காய்ச்ச - அவற்றின் இறைச்சி களைத் தீக்கடை கோலால் உண்டாக்கிய நெருப்பில் இட்டு வதக்குதலாலும்;

'முளவு' என்பது, முள்ளம் பன்றியின் பெயர்; மூண்டெழு சினத்துச்செங்கண் முளவு முள்ளரிந்து கோத்த” (கண்ணப்ப, 20) என்னுந் பெரியபுராணத் திருமொழியில் இப்பொருள் இனிது விளங்குதல் காண்க. “முளவுமா தொலைச்சிய” என மலைபடு கட ாத்தின் கண்ணும் (176) இத்தொடர் இங்ஙனமே வருதல் நினைவு கூரற்பாலது. ஞெலிகோல் - தீக்கடைகோல் எனவும், ‘பொத்துதல்' - கொளுத்துதல் எனவும் பொருடரல், ‘ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி, படுஞெமல் புதையப் பொத்தி” என்னும் அகநானுற்றிற் (39) காண்க.

-

(24-26) ஓரி பரந்த - நீலநிறம் பரவிய, தேன் இறால் எடுமார் தேன்கூட்டினை அழித்தெடுத்தல் வேண்டி, கழைக்கண் குறைத்து - மூங்கிற் கணுக்களைத் தறித்து, நலத்தக இயற்றிய - நன்றாகச் செய்த, மால்பு வைத்து இடந்தொறும் குறவர் ஏற கண்ணேணி பொருத்தி அம் மலைக்காட்டிடங்களெல்லாங் குறவர் ஏறுதலாலும்;

'ஓரி', நீலநிறம்;

இப்பொருளுண்மை "நீனிறவோரி

பாய்ந்தென” (524) என்னும் மலைபடுகடாத்தடியாலும், “ஓரியென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம்” என்னும் புறநானூற் (109) றுரையாலும் அறியப்படும்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/262&oldid=1587006" இலிருந்து மீள்விக்கப்பட்டது