உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் - 20

இறால், தேன்கூடு; 'எடுமார்’, வினையெச்சம்; ‘தீதுமறுங் கறுமார்’ என்புழிப்போல (புறநானூறு, 93). குறைத்து, தறித்து; 'மால்பு' மூங்கிலேணி; கண்ணேணியென்பதும் அது; “மால்பு கண் ணேணியின் பேர்" (7, 54) என்பது சூடாமணி நிகண்டு.

'இடந்தொறும்,' தேன்கூடுகள் தொங்குஞ் செங்குத்தான மலைப்பாறைகளின் இடமெலாமென்பது. குறவர், குறிஞ்சிநில மக்கள்; அவர் வேடர்.

(27-28) தினைக் குறு மகளிர் - தினைநெல்லை உலக்கையாற் குத்தும் பெண்கள், சுவைப்பட மிழற்றும் கிள்ளை உறக்கும் வள்ளை ஒலிப்ப - செவிக்கு இனிமை யுண்டாகும்படி இசைக்கும் ஒலிப்ப-செவிக்கு கிளிகளையும் உறங்கவைக்கும் படியான உலக்கைப் பாட்டினை ஒலித்தலாலும்;

-

குறுதல் - குத்துதல் “கொல்யானைக் கோட்டால் வெதிர் நெற்குறுவாம் நாம்” என்றார் கலித்தொகையிலும் (42).

-

6

மிழற்றல் சொல்லல் (திவாகரம்), இங்கே பாடுதல் என்னும் பொருளில் வந்தது.

66

“ஊழ்முறை யுலக்கை யோச்சி வாழிய, தகுமனைக் கிழவர் தம் வளங் கூறி, மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே” என்னுந் திவாகரத்தால் வள்ளை யின்னதென்றுணர்க.

‘உறக்கும்’, மென்மை வலித்துப் பிறவினைப்பொருள்

பயந்தது.

66

தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்” என்னும் மலைபடுகடாத்தடியோடு (342) இதனை யொப்பிட்டு நோக்குக.

(29-33) மருப்பு இடைச் சுற்றிய பொருப்பு உயர் வேழத்துப் புழைக்கை ஏய்ப்ப - தந் தந்தங்களிடத்துச் சுற்றிய மலைபோல் உயர்ந்த யானையின் துதிக்கையை ஒப்ப, விழுத்தக முதிர்ந்த தாளொடு வளைந்த குரல் - தினைப்புனத்து நன்றாக முற்றிய தாள்களுடன் நுனிவளைந்த கதிர்களையுடைய தினைப்பயிர்கள் உள்ள புனத்தின்கண், படுகிளி ஓப்பும் விடுகவண் சுழற்றி - அப்புனத்திலே விளைந்த தினைக்கதிர்களைக் கொண்டுபோக வந்து விழுகின்ற கிளிகளை ஓட்டுகின்ற கல்விடு கவணைக் கையிற் சுற்றியபடியாய், கோல்வளைக் கொடிச்சி - திரட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/263&oldid=1587007" இலிருந்து மீள்விக்கப்பட்டது