உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

239

யமைந்த வளையல்களை யணிந்த குறத்தியர், மேல் இதண் அமர - உயர்ந்து மேலே உள்ள பரணிற் பொலிவுடனிருத்தலாலும்;

'சுற்றிய புழைக்கை' யெனக் கொள்க. மருப்பிடைச் சுற்றிய புழைக் கை, தாளொடு வளைந்த குரல் தினைப்பயிர்க்கு உவமை; குரல், கதிர்; 'நெற்குரல் கௌவிய’ (2) வென முதற்செய்யுளின் கண்ணும் இஃதிப்பொருளில் வந்தமை காண்க.

66

‘ஒப்புதல்', ஓட்டுதல்; விடுகவண், எறிகவண்; ஆவது கல்லெறி கவண். 'கோள்வளை' திரட்சி பொருந்திய வளையல்; ‘ஆய்கோ லவிர் தொடி” என்னும் மதுரைக்காஞ்சியில் (563) இச் சொல் இப்பொருளில் வருதல் காண்க. ‘இதண்', பரண்; “நெட்டிதண் ஏறும் இப் புனத்தினளே” (53) என்பது கல்லாடம் இப் பகுதியைக் குறிஞ்சிப்பாட்டிற் போந்த

“நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத் துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி”

என்னும் பகுதியோடு (35-38) ஒப்பிட்டு நோக்குக.

(34-35) இரும்கல் வியல் அறை வரிப்ப - பெரிய அகன்ற கற்பாறைமேல் தங்கிளைகள் பட்டுக் கீறும்படியாக, தாஅய நலம்உறு வேங்கை பொலம் வீ உகுப்ப - பரந்த அழகுமிக்க வேங்கைமரங்கள் பொன்னிறமான தம் பூக்களைக் கீழே சொரிதலாலும்;

-

வரித்தல் கீறல், கோலஞ்செய்தல், எழுதல் என்னும் பொருளது; தாய- பரந்த; இச்சொற்கள் “காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவுடன், ஈயன்மூதாய் வரிப்ப என அகநானூற்றில் (14) இப்பொருளில் வருதல் காண்க. 'இருங்கல்வியலறை என்னும் இச் சொற்றொடர் குறுந்தொகையில் “நிரைவளை முன்கை’ (335) என்னுஞ் செய்யுளில் வருதல் காண்க.

ச்

நலம், இங்கு அழகு, “இளநலம் காட்டி” (திருமுருகாற்றுப் படை, 290) என்புழிப்போல. பொலம், பொன்னிறம்.

(36-42) தேக்குஇலை புய்த்த புன்தலைச் சிறாஅர் தேக்கிலைகளைப் பறித்த புல்லிய தலையினையுடைய குறச்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/264&oldid=1587008" இலிருந்து மீள்விக்கப்பட்டது