உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 20

சிறுவர்கள், மீக்கிளர் கோட்டில் பரிதியின் தொடுத்த தேத்தடை பிறைக்கோடு உழுதெனக் கீண்டு - மேலே வளர்ந்து விளங்கிய மலையின் கொடுமுடியில் ஞாயிறு போற் கட்டப்பட்ட தேனடையினை நிலாவின் வளைந்த நுனியானது உழுதுவிடவே அதனாற் கீறுண்டு, மாயோன் மார்பில் செஞ்சேறு கடுப்பப் பாயிழியும் படுநறவு முகந்து - திருமாலின் மார்பின்மேற் பூசிய சிவந்த நறுமணக்குழம்பை ஒப்பப் பாய்ந்தொழுகுகின்ற இனியதேனை ஓர் ஏனத்தில் முகந்துவந்து, பசும் தினைப் பிண்டியோடு அசும்புஉற அளாய் - புதிய தினைமாவுடன் அத் தேன் துளிக்கும்படி கலந்து, நிரைநிரை வைத்து விரைவொடும் ஆர - வரிசைவரிசையாக வைத்து விரைவாக உண்ணுதலாலும்;

‘புய்த்தல்’,பறித்தல்; "கோடுபுய்க்கல்லாதுழக்கும் நாடகேள் (38) எனக் கலித்தொகையில் இஃதுஇப்பொருளில் வருதல்கண்டு கொள்க; இச்சொல் இக்காலத்திற் ‘பிய்த்தல்' என வழங்குகின்றது.

வேட்டுவச்சிறார் எண்ணெய் முழுக்குக் காணாமையின் அவர் தந்தலைமயிர் பழுப்புநிறமா யிருத்தல் பற்றிப் “புன்றலைச் சிறார்” என்றார்; புன்மை - பழுப்பு நிறம் (பிங்கலந்தை).

‘பரிதி'யும் பிறைக்கோடு'ங் கூறியது மலையின் உயர்ந் தோங்கிய உச்சியைக் குறித்தற் பொருட்டென்க.

தேன், அடை என்பன “ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் (புள்ளி மயங்கியல், 49) நிலைமொழிஈறு கட்டு தகரவொற்று இரண்டுபெற்றுத் தேத்தடை' யெனப் புணர்ந்தன.

டையே

'கீண்டு', கீறுண்டு (திவாகரம்); “கீண்ட பாறொறும்' (அசுரர்தோ. 15) எனக் கந்தபுராணத்தும் போந்தது. திருமகள் ஞெமுங்கப் புல்லுதலின், அவள் மார்பத்தின் செஞ்சேறு திருமால் மார்பின்கண்ணும் பொருந்துவதாயிற்று.

படுநறவு, சுவைபடுநறவு; பிண்டி-மா; ‘அசும்பு’ நீர்த்துளி; “அசும்பினிற் றுன்னி” என்னுந் திருச்சிற்றம்பலக்கோவை யாரில் (1‘49) இப்பொருட்டாய் வருதல் காண்க.

இப்பகுதியின் கட் காட்டப்பட்டுள்ள உவமைகள் மிக்க

புலமைத் திறம் வாய்ந்தவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/265&oldid=1587009" இலிருந்து மீள்விக்கப்பட்டது