உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

241

(43) கண்களி கொள்ளும் பன்மலையடுக்கத்து - கண்கள் கண்டு மகிழ்ச்சியடைகின்ற பலமலைகளை யடுத்த மலைச்சாரலில், அடுக்கம் - மலைச்சாரல், (புறநானூறு, 168). 'அடுக்கத்து' ஏழன் உருபு விரித்துக்கொள்க.

உகள (17) திரிதர (19) செல்ல (21) காய்ச்ச (23) ஏற (26) ஒலிப்ப (28) அமர (33) உகுப்ப (35) ஆர (42) கண்களிகொள்ளும் பன்மலையடுக்கத்து (43) எனத் தொடர்ந்துகொள்க வென்பது.

-

-

(44-53) மரவமும் - குங்கும மரமும்; குரவமும் - குராமரமும், பொரிகெழு புன்கும்- நெற்பொரிபோன்ற பூக்களையுடைய புன்க மரமும், எரிகிளர் செயலையும் - தீ எரிதலை ஒப்ப விளங்கும் அசோக மரமும், விரி இணர் மாவும் விரிந்த பூங் கொத்து களுடைய மாமரமும், பராரைச் சாந்தும் பருத்த அரைகளை யுடைய சந்தன மரமும், பாவை ஞாழலும் - சித்திரப் பாவைபோல் விளங்கும் மலர்களையுடைய அழகிய கோங்க மரமும், விரிதலை வாழையும் - தலைவிரிதலுள்ள வாழை மரமும், வியன் சினைப் பலவும் - பெரிய பெரிய கிளைகளையுடைய பலாமரமும், கொன்றையும்-கொன்றை மரமும், புன்னையும் - புன்னை மரமும், ‘துன்றிய நறவமும் அடர்ந்துள்ள அனிச்ச மரம், என இவைகள், குழைமுகம் தோற்றி தளிர் நுனிகளைத் தோற்றி, கொழுநனை அரும்பி கொழுமையான மொக்குகள் அரும்பெடுத்து, புரிஅவிழ் மலரில் சிறுவடுக் கிளர்ந்து அவ்வரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்த மலர்களிற் சிறிய வடுக்கள் விளங்கி, தீவிளியாகி - பசுங்காய் ஆகி, தீம் கனி தூங்கி - இனிய பழங்கள் தொங்கவிட்டு, தண்ணிழல் பயந்து - குளிர்ந்த நிழலைத் தந்து, கண் கவர் வனப்பின் - கண்களைக் கவர்கின்ற அழகுடையதாய், முகில் கண்ணுறங்கத் தலைமையொடு பொலிமே ஒருபால் - மேகங்கள் தன் உச்சியில் அமர்ந்து உறக்கங் கொள்ளுமாறு அம்மலைச்சாரற் சோலை உயர்வுடன் விளங்கும் ஒரு பக்கலில் என்பது.

-

-

-

-

-

மரவம் - குங்குமமரம் (திவாகரம்). குரவம் பாவைபோன்ற பூக்களுடைய ஒருவகைமரம், “நறமலர்க் குரவம்பாவை, நிறையப் பூத்தணிந்து” என்றார் சிந்தாமணியிலும் (1270). புன்கமரத்தின் பூக்கள் நெற்பொரி போன்றிருத்தலின் 'பொரிகெழுபுன்கு' என்றார்; "பொரியெனப் புன்கு அவிழ் அகன்றுறை” என்பது அகநானூறு (116).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/266&oldid=1587010" இலிருந்து மீள்விக்கப்பட்டது