உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 20

ல'

தீக்கொழுந்து எரிதல்போல் அத்துணைச் செவ்வொளியுடன் அசோகின் தளிர்கள் விளங்குதலால் ‘எரிகிளர் செயலை எனப்பட்டது. “அத்தச் செயலைத் துப்புறழ் ஒண்தளிர்’ (273) என்னும் ஐங்குறுநூற் றடியின்கண்ணும் இவ்வியல்பு “துப்பு உறழ் ஒண்தளிர்' என்று கிளந்தோதப்படுதல் காண்க. ஞாழல் கோங்கமரம் (திவாகரம்).

நறவம் - அனிச்சமரம் (திவாகரம்).

6

பருமை அரை, பராரையெனத் திரிந்தது; “பராரை மராஅத்து” (திருமுருகாற்றுப்படை,) என்புழிப்போல.

தீவிளி

'வடு' வென்பது, இங்குப் பிஞ்சுகள் தோன்றும் வடு. தீMO - பசுங் காய் (பிங்கலந்தை). தூங்கல்' தொங்கலென்னும் பொருட்டு. முகில்கள் தவழும்படி அத்துணை உயரமாய்ச் சோலைகள் விளங்கினவென்க.

பொலிமே' யென்னுஞ் செய்யுமென்னு முற்றில் ஈற்றயல் உகரத்தொடுங் கெட்டது.

(54-64) சுளைநிரை அமைந்த கொழும் பழம் தூக்கி சுளைகள் வரிசையாய் அமைந்த கொழுவிய கனிகளைத் தொங்கவிட்டு, குறுமலர் அவிழ்ந்த நறுவிரை தெளித்து - தன் சிறிய பூக்கள் மலர்ந்தமையால் இனிய மணம் பரப்பி, வீசுகால் அசையும் பாசிலை நரந்தமும் - வீசுகின்ற காற்றினால் அசையும் பசுமையான இலைகள் நிரம்பிய நாரத்த மரங்களும், நலன்உறு மகளிர் இலவு இதழ் கதுவிய முறுவல் அன்ன - அழகு வாய்ந்த மகளிரின் இலவம்பூவி னிதழை ஒக்கும் இதழ்களின்

-

செந்நிறத்தைப் பற்றிய முளைப்பற்கள் ஒப்ப, சிறுவிதை பெய்த பொலன் குடம் எடுத்த உலவை மாதுளையும் - சிறிய வித்துக்கள் உள்ளிட்ட பொற்குடம் ஒக்கும் பழங்கள் தூக்கிய கோடுகளையுடைய மாதுள மரங்களும், கருமணி புரையும் ஒரு கனி நாவலும் கருமையான மணியை ஒக்கும் ஒப்பற்ற பழங்களையுடைய நாவன் மரங்களும், உவர்க்கழி மணக்கும் துவர்க்கால் வகளமும் உவர்த்த நீருள்ள கழியிடங்களும் மணக்குமாறு நறுமணங் கமழுஞ் சிவந்த காம்புகளுள்ள பூக்கள் நிறைந்த மகிழ மரமும், பொன்திரள் கடுப்பத் தெற்றென விளங்கும் எழில்கனி பழுத்த எலுமிச்சம் புதலும் பொன்னுருண்டை ஒப்பத் தெளிவாய் விளங்கும் அழகிய

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/267&oldid=1587011" இலிருந்து மீள்விக்கப்பட்டது