உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

243

கனிகள் பழுத்த எலுமிச்சம் புதர்களும், காவதம் கமழ மேவுவஅன்றே ஒருபால் -காவதத்தொலைவு மணங்கமழும்படி அம்மலைச்சோலையி னொரு பக்கலிற் பொருந்தி நிற்பனவாகும்; அன்று ஏ அசைநிலை.

நிரை, வரிசை; பசுமைஇலை, பாசிலை; ‘நரந்தம்’ நாரந்த மரம், (குறிஞ்சிப்பாட்டு,94).

நலன், ‘அழகு’; “பூநலம்” என்பதற்குப் 'பூவினாகிய அழகு' என்று பரிமேலழகியார் உரைகூறினார் (பரிபாடல், 16,18).

இலவிதழ் மாதுளவிதைகளின் ஒருபாற் செம்மைக்கும் முறுவல் ஒருபால் வெண்மைக்கும் உவமைகள்.

'பொலன்குட்' மென்பது ஈண்டுச் சிறு பொற்குடம் போற்றோன்றும் மாதுளம்பழத்திற்கு ஆயது உவமையாகுபெயர். உலவை மரக்கொம்பு (திவாகரம்).

வகுளம் - மகிழமரம் (திவாகரம்); துவர்க்கால்- பவளநிறம் உள்ள காம்பு; அதனையுடைய மலரும் அம்மலரையுடைய மரமும் ஈண்டு 'வகுளம்' எனப்பட்டன; இப்பவளக்கால் மல்லிகை யினையுந் தமிழ் நாட்டவர் ‘மகிழ்' என்கின்றனர்; பவளநிறக்காம்பு இல்லாத வேறொரு வகையினையும் ‘மகிழ்’ என்கின்றனர்.

'காவத' மென்பது இரண்டேகாற்கல்; ரண்டேகாற்கல்; இது முன்னுங் காட்டப்பட்டது.

(65-78) குலிகம் ஊட்டிய தலைமையின் திகழ்ந்து செந்நிறம் ஏற்றிய மேன்மையில் விளங்கி, நவ்வி நோக்கியர் செவ்வாய்போல - மான் பார்வையினரான மகளிரது சிவந்த வாய்போன்ற, கொழும் கனி உடைய கொவ்வைக் கொடியும் - கொழுவிய பழங்களையுடைய கொவ்வைக் கொடிகளும், கற்பு உடை மகளிர் முற்படச் சூடும் வரிசையின் மிகுந்த பரிசு உடை முல்லையும் கற்பொழுக்கமுள்ள மாதர் முதன்மையாகச் சூடிக்கொள்ளுந் தகுதியின் மேம்பட்ட பெருமையினையுடைய முல்லைக்

-

கொடிகளும், தின்பது கல்லாப் புன்தலை மந்திகறித்துத் துள்ளும் கறிவளர் கொடியும் வகைதெரிந்து தீனி தின்னுதலை இன்னுந் தெரியாத சிறிய தலையினையுடைய குரங்குக்குட்டிகள் தம்பற்களாற் கடித்து உறைப்பினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/268&oldid=1587012" இலிருந்து மீள்விக்கப்பட்டது