உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் - 20

- -

தாங்காமல் துள்ளுகின்ற மிளகுகாய்கள் வளர்கின்ற மிளகுகொடிகளும், அணில் புறம் கடுக்கும் வரியுடைக் கொடும்காய் கொள்ளையில் காய்த்த வெள்ளரிக் கொடியும் அணிற்பிள்ளையின் முதுகினை ஒக்கும் மூன்றுவரிகளுள்ள வளைந்த வெள்ளரிக்காய்கள் மிகுதியாகக் காய்த்த வெள்ளரிக்கொடிகளும், சொல்உயர் மரபின் மெல் இலைக் காடியும் புகழ்மிக்க தன்மையினையுடைய வெற்றிலைக் கொடிகளும், சிறுபளிக்கு உருண்டை செறிவுறுத்தனைய தீம் கனிக் குலைகள் தூங்க வயின்வயின் நந்தாது வளரும் முந்திரிக் காடியும் - சிறிய கண்ணாடி உருண்டைகள் ஒரு கொத்தாக நெருக்கி வைத்தாற்போல இனிய பழக்குலைகள் தொங்கா நிற்க இடந்தொறுங் கடாது வளர்கின்ற கொடிமுந்திரிக் கொடிகளும், இடைஇ இடை தாஅய் மிடையுமால் ஒருபால் இடையிடையே தாவிப் பின்னித் தோன்றும் மற்றொருபக்கத்தே என்பது.

குலிகம், செந்நிறம் (திவாகரம்).

‘நோக்கி’ யென்பதன் இகரம் பெண்பால் விகுதி.

-

கணவனைப் பிரிந்து அவன் பிரிவுன்னித் தங் கற்பினைப் பேணும் மகளிரது ஒழுக்கமே முல்லையொழுக்கமாகலின், 'கற்புடை மகளிர் சூடும் முல்லை' யென அஃதிங்குக் கிளந்து கூறப்பட்ட “கற்பொடு பொருந்திக் கணவன்சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லை யாதலின் அது முற்கூறப்பட்டது” என்பர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், அகத்திணையியல், 5). வரிசை (சிறுபாணாற்றுப்படை, 217).

-

தகுதி

மிளகுகாய்கள் காரமுடையவாகலின் அவற்றைத் தின்றால் நா எரியும் என்பதைத் தெரியா இளங்குட்டிகள் என்பார் “தின்பது கல்லாப் புன்றலை மந்தி” என்றார். ‘துள்ளுங்கறி’ துள்ளுதற்கேதுவாகிய கறி எனக் காரிய காரணப் பொருட்டு.

வெள்ளரிக்காய் அணில் முதுகுபோல் வரிகள் உடைமை, “அணில்வரிக் கொடுங்காய்” என்னும் புறநானூற்றினாலும் (246) அறியப்படும்.

மெல்லிலை - வெற்றிலை, (சீவகசிந்தாமணி, 62); வாயினுட் பெய்து மெல்லப்படுதலின் வெற்றிலை 'மெல்லிலை' எனப்பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/269&oldid=1587013" இலிருந்து மீள்விக்கப்பட்டது