உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

245

பெறலாயிற்று; வினைத்தொகை; எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை வழங்கப்படும் புகழுடையதாகலிற் ‘சொல்லுயர் மரபின்' என்று அடைகொடுத்தார்.

செறிவுறுத்தல்-நெருங்கச்சேர்த்தல்,“செறவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியன்" (பரிபாடல், 22, 21) என்புழிப்போல.

‘நந்தாது’, கெடாமல்; “நந்தாவிளக்கு” (சிந்தாமணி, 3144); "நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை” (திருவாசகம், திருப்பொற் சுண்ணம், 15) என்றருளிச்செய்வர் மணிவாசகப்பெருமான். தாவி, கலைதாய உயர்சிமையத்து” என்னும் மதுரைக் காஞ்சியிற் (332) போல.

தாஅய்

66

(79-81) நடுவில் - இத்தகைய சோலையின்நடுவில், பாய்ஒளி மதியம் - பரவிய ஒளியினையுடைய திங்களானது, பரிதிவெம்மை யின் - கதிரவன் வெம்மையினால், இளகிப் புனலாய் இழிந்தது கடுப்ப - உருகி நீராய்க் கீழே ஒழுகிப் பரவியதுபோல, தெளிநீர் வாவி ஒன்றுஉளது தெளிந்த நீரினையுடைய குளம் ஒன்று உள்ளது;

-

மதியமே இளகி நீராய் இழிந்ததென்றது, நீரின் குளிர்ச்சி தூய்மை சுவை நன்மை மினுமினுப்பு தெளிவு முதலியவற்றிற் தென்க.

'கடுப்ப உவமஉருபு; "தேங்கமழ் மருதிணர் கடுப்ப” திருமுருகு, 34) என்புழிப்போல. இவ்வுவமை மிக அழகிது.

(81-84) அது சிறுகால்தோறும் உறுநீர் ஒழுக்கி - அந்தக் குளம் சிறுசிறு வாய்க்கால் கடோறும் மிகுந்த நீரினை ஒழுகச்செய்து, வாலுகம் பரந்த கோலிய பாத்தியில் - வெண்மணல் நிரம்பிய வளைத்தமைக்கப்பட்ட பாத்தியின்கண், பச்சிளம்புல்லை நிச்சலும் வளர்க்கும் - பசுமையான இளம்புல்லை என்றும் வளரச் செய்யும்; அதான்று, அதுவுமல்லாமல்;

மற்று, அசை; உறுநீர், மிக்கநீர்; வாலுகம் - வெண்மணல்; "வேலைவாலுகத்து” என்னுஞ் சிலப்பதிகாரத்திலுங் காண்க.

(6,131).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/270&oldid=1587014" இலிருந்து மீள்விக்கப்பட்டது