உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் - 20

பாத்தி, சிறுவயல்; "கரும்பின் பாத்தி" என்பது பதிற்றுப் பத்து (13, 3).

‘நிச்சல்’ என்னுஞ் சொல்லும் பொருளும் முன்னே விளக்கப்

பட்டன.

நாள்மதிபோல-விண்மீன்

(85-98) அன்னச் சேவல் அணிமயிர்ப் பெடையொடும் பொன்னம் தாமரை பொலிந்து வீற்றிருப்பவும் -அன்னப் பறவையின் ஆண் அழகிய தூவியினையுடைய தனது பெண் அன்னத்துடன் பொன்போன்ற அழகிய செந்தாமரை மலரின் மேற் காதலினால் விளங்கி ஒன்றாய் மகிழ்ந்திருக்கவும், நித்திலம் பயந்தநத்து-முத்துகளீன்ற சங்கங்கள், வான் மடுவில் வானமாகிய நீர் நிலையில், மீன்இனம் வளைஇய நாள்மதிபோல - விண்மீன் கூட்டங்கள் சூழ்ந்த முழுநிலாப்போல, பால் கெழு மரபின் பரந்து செல்லவும் - தன்பக்கத்தே பொருந்திய தன்மையுடன் பரவி ஏகவும், கொழும் கயல் மாதர் விழி என மிளிரவும் - கொழுமை யான கெண்டை மீன்கள் மகளிருடைய கண்கள் போற் புரளவும், கருவெரிந்உடைய பருவரால் உகளவும் - கரிய முதுகினையுடைய பருத்த வரால் மீன்கள் அங்குமிங்கும் புரளவும், முற்றாமஞ்சள் சிறுபுறம் கடுக்கும் இறவு கரை மருங்கில் சுரிந்து துள்ளவும் முற்றாத பசுமஞ்சட் கிழங்கின் சிறிய முதுகினை ஒக்கும் இறாமீன் கரையருகிற் சுருண்டு துள்ளவும், சிறுவளி எடுப்பச் சிறுதிரை எழீஇ முறைமுறை உராஅய்க் கரையினைச் சாரவும் - சிறுகாற்று எழுப்ப அதனால் மெல்லிய சிற்றலைகள் எழுந்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பரந்துசென்று கரையினைப் பொருந்தவும், செழுநீர்க் குவளையும் கழுநீர்ப்போதும் முழுநெறி ஆம்பலும் கழியவும் குழுமிக் காண்போய் பிணிக்கும் மாண்பினது - செழுமையான நீர்க்குவளையென்னும் நீலப்பூவும் செங்கழுநீர்மலரும் அல்லி பாட்டும் மிகுதியும் நிறைந்து காண்பவர் உள்ளத்தைத் தன்வயப் படுத்தும் மாட்சியினை யுடையதாகும் அக்குளம் என்பது.

அன்னத்தின் தூவி மருவுதற்கு மென்மைதரு மாகலின், ‘அணிமயிர்ப்பெடை' யென இங்குச் சிறப்பிக்கப்பட்டது.

'பொலிந்’தெனற்குக் 'காதலால்விளங்கி’யென உரை கொள்ளல் சிறப்பு.

‘வீற்றிருத்தல்’, இங்கு 'மகிழ்வுடனிருந்த' வென்னும் பொருட்; புறப்பொருள் வெண்பாமாலை யுரையிற் ‘செம்மாந்திருத்த' லென்பர் (9,20).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/271&oldid=1587015" இலிருந்து மீள்விக்கப்பட்டது