உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை சேவல், ஆண்; பெடை, பெண்.

247

நாண்மதி, பருவநாளின் மதி; ஆவது முழுநிலா. மிளிர்தல். புரளல் (சிந்தாமணி,13,84). சுரிதல், சுழித்தல்.

இறாமீன் முதுகு, முற்றாத மஞ்சட்கிழங்கின் முதுகுபோன் றிருத்தல், “முற்றாமஞ்சட் பசும்புறங்கடுப்பச் சுற்றியபிணர சூழ்கழி யிறவின்” என்னும் நற்றிணைச் செய்யுளுள்ளுங் காண்க.

(101).

உராய் - பரந்துசென்று, (மதுரைக்காஞ்சி,125).

66

'கழுநீர்ப் பிணையன் முழுநெறி பிறழ" (மனையறம், 34) எனவருஞ் சிலப்பதிகாரத்துக்கும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ‘இதழொடியாது கட்டின கழுநீர்ப் பிணையலுங் குலைந் தலைய’ என்று முழுநெறிக்கு இதழொடியாமைப் பொருள் கிளப்பர்.

‘பிணித்தல்’ தன்வயப்படுத்தல் என்னும் பொருட்டாதல், "கேட்டார்ப்பிணிக்குந் தகையவாய்” என்னுந் திருக்குறளால் (643) அறியப்படும்.

-

(98-103) ஆங்கு அம்மலைச்சாரலிடத்தே, பொதியச் சாந்தம் ததைய அசைஇ - பொதியமலையின் சந்தனமணம் நிறைய உலாவி, அரும்பு அற விரிந்த நறும்பு அளைஇ - முகையாந்தன்மை நீங்க மலர்ந்த மணமுள்ள மலர்களைத் துழாவி, விரையும் தாதும் நிறையமுகந்து - முறையே நறுமணமும், மகரந்தமும் நிரம்ப அள்ளிக்கொண்டு, தலைத்தலை வீசி நலத்தக உலாஅம் தென்றலும் என்றும் ஓவாது -இடந்தொறும் வீசி இனிமையாக அசையுந் தென்றற்காற்றும் எந்நேரமும் நீங்காது; அதாஅன்று - அதுவுமன்றி;

சாந்தத்தினின்று விரையும், நறும்பூவினின்று தாதும் முகந்தென நிரல் நிரையாக் கொள்க.

‘ததைய’, நிறைய, “ததை இலை வாழை' (47, 10) என்பது ஐங்குறுநூறு.

(104-125) குன்றிக் கண்ண குயில்க ளெங்கும் துன்றிய மகிழ்வின் நன்று கூவும்மே - குன்றிமணியின் செந்நிறமுங் கரும் புள்ளியும்போற் சுற்றச் செந்நிறமும் நடுவிற் கருநிறமும் வாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/272&oldid=1587016" இலிருந்து மீள்விக்கப்பட்டது