உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

  • மறைமலையம் 20

விழிகளை யுடையவான குயிற் பறவைகள் அச்சோலை யெங்கும் மிகுந்த களிப்பினால் இனிதாகக் கூவாநிற்கும்; ஆடு வால் சிரல்கள் நாடொறும் கூடி ஓடுமீன் அருந்தி வீடுறா ஆடுகின்ற வாலையுடைய சிச்சிலியென்னும் ஒருவகைக் குருவிகள் நாடோறும் ஒன்றுசேர்ந்து அந்நீர் நிலையில் ஓடுகின்ற சிறு மீன்களைக் கௌவி விழுங்கி என்றும் அவ்விடத்தைவிட்டு நீங்கா; துகிர் கோத்த அன்ன உகிருடைச் சிறுகால் புற மரப் பொதும்பின் இறைகூரும்மே பவளங்களை ஒன்று கோத்தாற்போன்ற நகங் களையுடைய சிறுகாலினையுடைய புறாக்கள் மரப்பொந்தின் கண் தங்காநிற்கும், தூங்கணம் குரீஇப் பாங்குபடத் தெற்றிய அருந்தொழில் குடம்பையின் பொருந்தும் - தூக்கணங் குருவிகள் தாம் அழகுபடப் பின்னிய அரிய வேலைப்பாடுடைய கூடுகளில் அடையும், பைம் சிறைக்கிள்ளை ஒருகால் தூக்கிப் புன்சிறு கிளையில் கண்துயில் கொளுமே பசுமையான இறக்கைகளை யுடைய கிளிகள் தமது ஒருகாலைத் தூக்கிக் கொண்டு மெல்லிய சிறு கிளைகளில் நின்று கண்கள் தூக்கங்கொள்ளும், அறுவை மடித்தன்ன பறைகெழு நாரை சிறுகால்தோறும் வரும் மீன் நோக்கித் தொகுதியாக மிகுதியொடு வதிமே - மெல்லிய வெள்ளைத் துணியை மடித்தாற்போன்ற இறக்கைகள் பொருந்திய நாரைகள் சிறிய வாய்க்கால்கடோறும் ஓடிவருகின்ற மீன்களை எதிர்பார்த்துக் கொண்டு கூட்ட மாக மனக்கிளர்ச்சியுடன் தங்கியிருக்கும், வண்டும் தேனும்வரிக்கடைப் பிரசமும் இம்மென முரன்று நன்மலர்தோறும் அளிநற மாந்திக் கலிகூரும்மே ம வண்டும் தேன்வண்டும் வரிவண்டும் தேனீயும் என்பன இம்மென்னும் ஒலியுண்டாக ஒலித்து நல்ல மலர்கள் தோறுஞ் சென்று முதிர்ந்த தேன் பருகி மகிழ்ச்சிமிகும், பூவாக்கண்ண தோகை விரித்து முளை இள ஞாயிற்று இளவெயில் எறிப்பப் பீடுறு மஞ்ஞை ஆடுறும் - இயற்கையே திறந்திருப்பதல்லது இடையே திறவாத கண்களையுடையவான தம் தோகைகளை வட்டமாய் விரித்துக் காலையிற் றோன்றும் இளங்கதிரோனது மென்மையான வெயில்ஒளி வீச அப்போழ்து பெருமை மிக்க மயிலினங்கள் விளையாடா நிற்கும், இன்னும் கூறல்வேண்டின் - இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டுமானால், பின்னும் மேலும், என் சொல் அளவு அமையா -எனது சொல்வரம்பிலமையாத, மல்லல் அம்பொதும்பர்ப் பல்பெரும் சிறப்பும் கண்டிலை - அத்துணைச் செழுமையான அழகிய அம்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/273&oldid=1587017" இலிருந்து மீள்விக்கப்பட்டது