உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

249

மரச்சோலையின் பல பெருஞ்சிறப்புக்களும் நீ கண்டனையல்லை யெனவே கூறல் தகும் என்பது.

இப் பகுதியிற் சோலைவளம் மிக அழகாகக் கூறப் பட்டிருக்கின்றது.

கண்ண, குறிப்பு முற்றெச்சம்; கண்ணவான குயில்களெனக் கொள்க.‘துன்றுதல்’,நெருங்குதல்; அஃதிங்கு ‘மிகுந்த’ வென்னுங் கருத்துப்பட வந்தது.

குயிற்பறவையின் கண் குன்றிமணியைப் போலிருத்தல், "குன்றிச் செங்கண் இன்றுணைப்பேடை” என்னும் பெருங்கதை யினுள்ளுங் காணப்படும் (3,6, 11).

‘சிரல்’ என்பது சிச்சிலிக்குருவி; இது “மறிந்து நீங்கு மணிச் சிரல் காணென" (பளிக்க, 24) என மணிமேலையின் கண்ணும் வருதல் காண்க. வீடு விடுதல்; நீங்கல்; உயிர்க்கொலை புரிதலால் இறைவனது வீட்டுலகினை எய்தா என ஒரு பொருள் தோன்று தலுங் கண்டுகொள்க. அன்றும் ஏவும் அசை மேல்வருவனவும் அன்ன.

புறாவின் கால் பவளங் கோத்தாற்போ லிருத்தல், “கொள்ப வளங் கோத்தனைய கால” என்னுஞ் சிந்தாமணியுள்ளுங் காணப்படும். (70)

'துகிர் கோத்த அன்ன உகிர்' என்னும் உவமை பெரிதும் உணர்ந்து இன்புறம் பாலது. 'இறைகூரல்’ தங்கல் என்னும் பொருட்டு; “இறைகூரும்” (142) என ஐங்குறுநூற்றின் கண்ணும் வந்தது.

குரீஇ குருவி, "உள்ளிறைக்குரீஇ" (நற்றிணை, 181) தெற்றுதல், பின்னல்; குடம்பை, பறவைக்கூடு; பிங்கலந்தை.

கிள்ளை, கிளி; கொளுமே, ளகரம் தொகுத்தல்;

பறை-இறகு, பிங்கலந்தை. வதியுமே யென்பது ஈற்றய லுகரம் மெய்யொடுங் கெட்டு 'வதிமே’ யென்றாயிற்று.

வண்டினங்களில் நால்வகை வண்டினங்கள் இங்குக் கூறப்பட்டன; தேன், தேன்வண்டு; வரிக்கடை - வரிவண்டு (திவாகரம்). பிரசம் - தேனீ (பிங்கலந்தை).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/274&oldid=1587018" இலிருந்து மீள்விக்கப்பட்டது