உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

தேன்.

மறைமலையம் - 20

அளி, முதிர்ச்சி, “அளிந்த தீம்பழம்” (சிந்தாமணி, 2682). நறா,

மயிற்றோகையின் கண்கள் திறந்துமூடும் மக்கள் கண் போலாது இயற்கையிற் றிறந்தபடியே யிருத்தலின் பூவாக் கண்ண என்றார்.

முளை, வினைச்சொல்; அப்போழ்து என ஒருசொல் வருவிக்க ஆடுறும், - ஆடும்;

ஈற்றிற் கண்டிலை எனவே கூறல் தகும் எனச் சிலசொற்கள் எச்சமாக வருவித்துக்கொள்க. மல்லல் - செழுமை.

ம்

-

-

(125-147) அன்றி ஆங்கு அல்லது அப்பொதும்பரின்கண், அனிச்சம் மேல் படினும் தனித்துயர் உழக்கும் தழைமலர்ச் சீறடி குழைபட நடந்து - அனிச்சமலரின்மேற் பட்டாலும் மிக்க துன்ப மடையுந் தழைந்த செந்தாமரை மலரனைய சிறிய திருவடிகள் தசைமெல்ல நடந்து, பொழிலிடம் புகுந்து - சோலையுள் நுழைந்து, பூம் தடமருங்கில் - பூக்கள் நிறைந்த அக்குளத்தருகில், விழைதக நின்ற பழுதில் பாவையை - விருப்பமுண்டாகும்படி நின்ற குற்றமில்லாத பாவை போல்வாளை, என்உளம் என்னும் தன் அமர் கிழியில் - எனது உள்ளமென்னுந் தனக்குப்பொருந்திய இரட்டுத் துணியில், வழுவின்று எழுதிய எழில் ஓவியத்தை - பிழையில்லாமல் எழுதிய அழகு சித்திரம் போல்வாளை, அமிழ்து பொதி துவர்வாய்க் கிளவி சில மிழற்றும் அமிழ்தம் நிறைந்த தனது சிவந்த வாயிலிருந்து சொற்கள் சில பேசும், மாநிறம் கொண்ட தூ நிறக் கிளியை - பசுமை நிறம் கொண்ட தூய உருவினையுடைய ய கிளிபோல்வாளை, காடு உறை வாழ்க்கை தன் இனம் பிரிந்து காட்டில் வாழ்கின்ற வாழ்க்கையை யுடைய தன் கூட்டத்தை விட்டு நீங்கி, நாடு உறை வாழ்க்கை நன்கனம் மருவிய நாட்டின்கண் வாழும் வாழ்க்கையை நல்லபடியாகப் பொருந்திய, குடம் மாண் காங்கை மடமான் பிணையை குடங்கள் போன்ற பெரிய காங்கைகளை யுடைய இளமான்பேடு ய இளமான்பேடு போல்வாளை, கிளிச்சிறை என்னும் பழிப்புஅறு பசும்பொன் கரைத்து கிளிச்சிறை என்னும் மாசற்ற ஒருவகைப் பசும்பொன்னை நீராய் உருக்கி, ஈண்டு எழுதிய தரைக் கிளர் வல்லியை - அதனால்

L

-

-

-

ந்நிலவுலகில் எழுதி யமைத்த நிலத்தினின்றும் எழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/275&oldid=1587019" இலிருந்து மீள்விக்கப்பட்டது