உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

-

251

பொன்னிறமான வல்லிக் கொடி போல்வாளை, காமக் கடும் பசி நாம் உறக் களையும் காமம் என்னும் கொடிய பசியானது அச்சம் அடையும்படி அதனை நீக்கும், பெறுதற்கு அரிய உறுதுணை மருந்தை அடைவதற்கு அருமையான சிறந்த துணையாயுள்ள மருந்துபோல்வாளை, காண்டல் செல்லா அருவப்பொருளென காண்டல் இயலாத உருவமில் பொருளென்று கூறும், பூண்டோர் புகழ்உரை புரைபட்டு ஒழிய பேர் பூண்ட பெரியோர்களது புகழ் தக்க உரையானது பழுதுபட்டொழியு மாறு, மின் என மிளிர்ந்து என் கண் எதிர் பொலிந்த மின்னல்போல் பிறழ்ந்து ஒளி வீசி என் கண்கள்முன் விளங்கிய, கரும்பினும் இனிக்கும் என் அரும்பெறல் உயிரை கரும்பைப் பார்க்கினும் இனிக்கின்ற என் பெறற்கரிய உயிர் போல்வாளை, என் உளம் மன்னிய துன் இருள் நீங்க - எனது உள்ளத்தில் நிலைபெற்ற செறிந்த மலவிருளானது ஒழியுமாறு, முற்படக் கொளுவிய பொன்சுடர்க் கொழுந்தை - என்னெதிரிற் பொருத்திய பொன்னிறமான ஒளிக்கொழுந்துபோல் வாளை, புலம் கொளக் காணும் பொறியும் இலையால் - காட்சியாக காணும் நல்வினை யும் நினக்கில்லை யென்பது.

தழைமலர், வினைத்தொகை; சிறுமை அடி, சீறடி.

-

கிழி, எழுதுபடம்; “ஈசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்து” ( திருக்கோவையார், 74) என்பர் மணிவாசகனார்; அஃதிங்கு அப்படமெழுதுந் துணியை உணர்த்தாநின்றது. அமர்தல் பொருந்துதல், (புறப்பொருள் வெண்பாமாலை, 4,

-

5).

உண்மையுடையளாகலின், சிலசொற்களே அவள் வாயி னின்றும் எழுவவாயின. அன்றி முள்ளெயிறுபோழ்தல் அஞ்சிச் சிலசொல்வே பேசுவளென உரைத்தலுமாம். மிழற்றல், நிரம்பா மென்சொற் கூறல்; தலைவி புத்திளமையுடைய மடவரலாகலின், இங்ஙனம் 'மிழற்று' மெனப்பட்டது. உருவகமாய் வந்த கிளியினியற்கைக்கும் இச்சொற்பொருள் ஒக்கும். 'அமிழ்து பாதி வாய்’ என்றமையின், அவ்வாயினின்றெழுங் கிளவிகளெல்லாம் அமிழ்தமாகுமென்பது குறிப்பாற் பெறப்படும். நிறம் இரண்டனுள் முன்னது வண்ணமும் பின்னது உருவமும் உணர்த்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/276&oldid=1587020" இலிருந்து மீள்விக்கப்பட்டது