உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

  • மறைமலையம் - 20

‘நன்கனம்’ என்பதற்கு ‘நன்றாக' என்று பொருளுரைப்பர் பரிபாடலுரையில் (15:25).

தலைவி பொற்கொடிபோல் உள்ளாள் என்பது கருத்து. கிளர்தல் - எழுதல் (திருமுருகு. 82).

நாம் அச்சம் (தொல்காப்பியம், உரி, 67); பசியே அச்சமுறும்படி அதனைக் களையும் மருந்தென்க. கடுமை, இங்குக் கொடுமை மேற்று; "கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்" (6) என்னுங் கலித்தொகையிற்போல. காமம் விளைப்பவளே காமத்தை நீக்கும் மருந்தாதலும் வேண்டுமாகலின், 'உறுதுணை மருந்து' எனப்பட்டாள். இக்கருத்துட்கொண்டே.

"இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

وو

என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் (திருக்குறள், குறிப்பறிதல்,1) கூறுதல் இங்கு நினைவு கூரற்பாலது.

உயிரென உருவகப் படுத்தினமையின், 'காண்டல் செல்லா அருவப்பொரு'ளென அதன் இயல்புரைத்துப் பின் வியந்து மொழியப்பட்ட தென்க.

உற்றுநோக்குங்காற் கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அவரவருயிரைச் செறிந்த பொல்லாப் பழமலவிருளை நீக்கிக்கொள்ளும் இயற்கையுறவினராவர்; இதனானன்றே திருக்குறள் வேதத்தினும் மனையாள் “வாழ்க்கைத்துணை (அதி. 6) எனப்பட்டதூஉ மென்பது. இதனை விளக்குதற் பொருட்டே இலக்கியங்களிலெல்லாம் ‘மனைக்கு விளக்கு மடவார்’ என்றற் றொடக்கத்துரைகளால் வாழ்க்கைத் துணையாவார் மலவிருள் நீக்கும் ஒளிவிளக்காக வைத்துப் பாராட்டப் படுகின்றனர். இது முன்னுங் காட்டப் பட்டுள்ளது (இந்நூல், 4:18 உரை).

.

பாவை, ஓவியம் முதலியன உருவகங்கள்.

(148-162) ஆவண ஒலியும் அரும் கடல் ஒலியும் ஒன்று தலைமயங்கி என்றும் ஓவா ஒற்றிமாநகரில் - கடைத்தெருவின் விற்பனை ஒலியும் அளத்தற்கரிய கடலொலியும் ஒன்று கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/277&oldid=1587021" இலிருந்து மீள்விக்கப்பட்டது