உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

253

-

என்றும் நீங்காமலிரா நின்ற திருவொற்றிமா நகரின்கண், தன் தகப்பொலிந்த பசியதோர் மஞ்ஞைமிசை அமர்செவ்வேள் தனது அழகிய இளமைச் செவ்விக்குத் தகும்படி விளங்கிய பசுமைநிற முள்ளதொரு மயிலின் மேல் எழுந்தருளாநின்ற செம்மை நிறம் பொருந்திய முருகன், தேவரும் மயங்கும் மூவா மாயம் பலமுறை இயற்றிய தலைமை தீர்சூரின் பேர் உரம் வசிந்த கூர்வடிவேலன் - தேவர்களும் மயங்கும்படி யான அழியாத மாயச் செயல்களைப் பலதடவை செய்த தலைமை நீங்குந் தகையனான சூரனது அகன்ற மார்பைப் பிளந்த கூர்மையுள்ள செவ்விய வேற்படையை யுடையவன், நோனா உள்ளத்து நான்முகன் தெளியத் தலையில் குட்டிய நலன்உறு குமரன் - 'ஓம்' என்னும் ஒருமொழியின் உண்மைப்பொருள் நாணுந் தவம் வாயாத உள்ளத்தையுடைய நான்முகன் அதன் பொருள் தெளியும்படி அவன் தலையிற் குட்டிய அழகு பொருந்திய இளம்பருவமுள்ள முருகப்பெருமான், விண்ணவர்க்கு அரியன் - தேவர்கட்குங் கிடைத்தற் கருமை யானவன், எம்மனோர்க்கு எளியன் - ஆனால் அடியேன்போன்ற எளியோர்க்குக் கிடைத்தற் கெளிமையானவன், பிறைமுடி புதல்வன் - பிறை தங்கிய சடைமுடியை யுடைய சிவபெருமானுக்குப் புதல்வன், மறை முடி முதல்வன் நான் மறைகளின் முடிவிடத்துக்குத் தலைவன், உமைதரு சிறுவன் - உமைப் பிராட்டியார் ஈன்றெடுத்த புதல்வன், எமை அளி உறுவன் எளியேமை அருள்கூர்ந்து காக்கும் மிக்கோன், பன்னிரு கையன் - பன்னிரண்டு திருக்கைகளை யுடையவன், என் உயிர்க்கு ஐயன் எனது ஆருயிர்க்கு உயிராயுள்ள தலவைன் என்னும் முருகப் பெருமானுடைய, திருவடி நினையா அறிவிலர்போல திருவடி களை எண்ணும் பேறுபெறாத அறிவில்லா மக்களைப்போல், என் எதிர்தோன்றிப் பன்முறை கழறினை - என்முன் வந்து பலதரம் இடித்துரைத்தனை;

-

தலைமைதீர், தலைமைதீர்ந்த; முருகனைப் பகையாமுன் னிருந்த தலைமை அவனைப்பகைத்தபின் தீர்ந்தமையின் தலைமைதீர் சூர் என்றார். வசிந்த, பிளந்த; "வசித்ததைக் கண்டமாக" (5: 38) என்பது பரிபாடல். (5:38)

'நோனா உள்ள' மெனப்பட்டது, ஓங்காரத்தின் மெய்ப் பொருளை உணருந் தவமியற்றப் பெறாத உள்ளத்தை யுடைய நான்முகனென்க; நோனாமை - தவம்புரியாமை; நோன்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/278&oldid=1587022" இலிருந்து மீள்விக்கப்பட்டது