உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 20

என்னுஞ் சொல்லின் எதிர்மறை. நான்முகன் ஓங்காரத்தின் கருத்துணராமைக்காக முருகப்பெருமான் அவன் தலையிற் குட்டிய வரலாறு,

66

‘எட்டொணாத அக்குடிலையிற் பயனிலைத் தென்றே கட்டுரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய் சிட்டி செய்வது இத்தன்மையதோ எனாச் செவ்வேள் குட்டினான் அயன்நான்குமா முடிகளுங்குலுங்க”

என்னுங் கந்தபுராணச் செய்யுளால் (அயனைச் சிறைபரிபடலம், 11) அறியப்படும்.

பிறை முடி, ஆகுபெயர்; மறைமுடி, மறைகளின் முடிந்த

கருத்து.

உறுவன் - மிக்கோன் (சிலப்பதிகாரம், 9, 53).

இறைவன் றிருவடி நினையா அறிவிலார் உண்மைகாணும் நீரரல்லராகலின், அவர்போல் நீயும் எங்கள் இயற்கைக் காத லுண்மையையும் அக் காதற்பேற்றை நல்கிய என் காதற் செல்வியின் அருமை பெருமையையும் உணராது கழறுகின்றனை யெனத் தலைவன் தன்பாங்கனை நோக்கிக் கூறுங்கருத்து விளங்க இங்குத் 'திருவடி நினையா வறிவிலர்போல' வென்றருளிச் செய்தார்.

கழறுதல், இடித்து உறுதியுரைத்தல்; “அன்பில கடிய கழறி” (14:8) என்பது ஐங்குறுநூறு.

-

(163 -167) ஈங்கு இது விடுத்து - இங்கு நீ இங்ஙனங் கழறலை ஒழித்து, ஆங்குச்சென்று அம்மரப் பொதும்பரின் குளத்தருகிற் சென்று, துடிஇடை ஒருகை ஊன்றி வடிவிழி திசைமுகம் பரப்பி நசைப்படப் பார்க்கும் இரும்கண் மான்பிணை காணில் - உடுக்கை போன்ற தன் இடுப்பின்கண் தனது ஒருகையை வைத்துக் கொண்டு வடுவகிர்போலுந் தன் கண்களை நாற்புறங்களிலும் போக்கிக் கண்டார்க்கு விருப்பமுண்டாகும்படி பார்க்கும் பெரிய பார்வையை யுடைய மான்பேடுபோலும் என் தலைவியைப் பார்த்தால்,நெருங்கி நின்று இங்கு உரையலை இனி - இத்துணை அணுகிநின்று இங்ஙனம் இனிமேல் உரைப்பாயல்லையென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/279&oldid=1587023" இலிருந்து மீள்விக்கப்பட்டது