உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

வடி மாவடுவின்பிளவு,

66

வடிக்கண

திருக்கோவையாருரையை நோக்குக.

255

என்னுந்

நசை, விருப்பம், “நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய” (புறநானூறு,15) என்புழிப்போல.

'இருங்கண்' என்புழி 'இருமை' பெருமையெனவும், ‘கண்’ பார்வையெனவும் பொருள்படும். நெருக்கம், மனநெருக்கம்.

L

நண்பா (15) பன்முறை கழறினை (162) மான்பிணைகாணில் (166) நெருங்கி நின்றிங்கு உரையலை இனி னி (167) என முடிக்க, (25)

26. பிரிவாற்றாத தலைவி தோழியொடு கூறல்

“இனியா ரெனக்கிங் கினியா ரியைந்தார்

முனியார் முனிந்து மொழியார் - பனிமொழியாய்

புள்ளொன் றிவர்ந்து புகழொற்றித் தந்நகர்க்கு நள்ளிருட்கட் சென்றார் நமர்.'

இ-ள்) இனி யார் எனக்கு இங்கு இனியார் இயைந்தார் இனி மேல் யார் எனக்கு இங்கு இனியராய் இணங்கியுள்ளவர், முனியார் முனிந்து மொழியார் -நம்மவர் சினவார், சினந் தொன்று பேசார்; பனிமொழியாய் - குளிர்ந்த இன்சொல் உடைய உயிர்த்தோழீ, புள் ஒன்று இவர்ந்து புகழ் ஒற்றித் தம் நகர்க்கு மயிலென்னுந் பறவை ஒன்றன்மீது மேற்கொண்டு புகழ்மிக்க திருவொற்றியூரெனும் தம் திருநகரத்துக்கு, நள் இருள்கண் சென்றார் நமர் - செறிந்த இருளில் நங் காதலர் சன்றார் என்பது.

ஒருகாலத்திலும் முனிதலும் முனிந்து பேசுதலு மில்லா அத்துணை அன்பினரான நமர், புள்ளொன் றிவர்ந்து தம் நகர்க்குச் சென்றார்; இனி யாரெனக்கு இங்கு இனியராய் இயைந்தார் இருக்கின்றனர் என்பது கருத்து.

-

இயைந்தார் வினையாலணையும் பெயர்; காதலராய் யைந்தவர் என்னும் பொருட்டு. இவர்தல் - மேற்கொள்ளல், "இவர்தந்தென்மேனிமேலூரும்பசப்பு”என்பதற்குப்பரிமேலழகியா ருரைத்த வுரைகாண்க (திருக்குறள், 1182). நள் இருள், நடு இரா.

66

(26)

- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/280&oldid=1587024" இலிருந்து மீள்விக்கப்பட்டது