உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 20

-

27. நெஞ்சறி வுறுத்தல்

“நமரா யிருந்துபின் ஏதில ராவர் நயமிலருந்

தமராவ ரென்னிற் றமர்பிற ரென்று தகவுசொல்லி

அமராடி நிற்றல் வறிதுகண் டாயலை யாழியொற்றிக் குமராவென் றோதிக் குடந்தங்கொண் டேத்தக் குறிக்கொணெஞ்சே”

இ-ள்) நமராய் இருந்து பின் ஏதிலராவர் மக்களிற் சிலர் சில காலம் நமக்குச் சுற்றத்தாராயிருந்து பின் அயலவராய் விடுவர், நயமிலரும் தமராவர் - அன்பில்லாத அயலவரும் ஒருகால் நமக்கு வேண்டியோராவர், என்னில் - என்றால், தமர் பிறர் என்று தகவு சொல்லி அமராடி நிற்றல் வறிது கண்டாய் - உலகத்தில் நம்மவரென்றும் அயலவரென்றும் பெருமை பேசிப் போராடி நிற்றல் வீணென்றறிவாய், அலை ஆழி ஒற்றிக் குமரா என்று ஓதி குடந்தம் கொண்டு ஏத்தக் குறிக்கொள் நெஞ்சே - ஆதலால் அலைமிக்க கடலை அணித்தாகவுடைய திருவொற்றிமுருகா என்று சொல்லிக் கைகூப்பி மெய்வளைத்து வழுத்தத் துணிவுகொள்வாய் நெஞ்சமே என்பது.

‘நயம்’, ஈரம், “நண்பாற்றாராகி நயமிலசெய்வார்க்கும்” (திருக்குறள், 998). தகவு - பெருமை, "தகவேயுடையான் றனைச் சார' என்னுந் திருவாசகமாமறையில் (யாத்திரைப்பத்து, 2) இப்பொருட்டாதல் காண்க.

‘குடந்த’மென்பது ஒருவகை அஞ்சலி; அதாவது 'கைகூப்பி மெய்வளைத்து வணங்கல்”; “குடந்தம்பட்டுக் கொழுமலர் சிதறி” எனத் திருமுருகாற்றுப்படையிலும் (229) இதுவரும்; “குடந்தங் கைகூப்பி மெய்கோட்டிநிற்றல்" என்றார் திவாகரத்திலும்.

குறிக்கொளல், மனத்துள் வைத்துச் செயல் முடிக்குந் துணிவு கொள்ளுதல்; "குறிக்கோட்டகையது கொள்கெனத் தந்தேன்” என்பது சிலப்பதிகாரம், 30, 63.(27)

28. புலவராற்றுப் படை

அஃதாவது, பரிசுபெற்றுத் திரும்பும் புலவன் ஒருவன் அது பெறுங் கருத்துடன் எதிர்வரும் புலவனொருவனை வழியிற் கண்டு தனக்குப் பரிசளித்த அரசனது பெருமையும் அவன்பால் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/281&oldid=1587025" இலிருந்து மீள்விக்கப்பட்டது