உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

257

பெறவேண்டும் வகைமையும் பிறவுந் தெளியஉணர்த்தி, உணர்த்திய அந்நெறியே அவனை உய்ப்பதாகும். எனவே 'ஆற்றுப்படை' யென்பது எதிர்ப்பட்டாரைத் தாம் பரிசுபெற்ற வாற்றிற் படுப்பிப்பது எனப் பொருள்தருமென்க. இவ்வியல்பு.

“ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்'

என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தாற் (புறத். 36) பெறப்படும். (1-11) நெஞ்சு நெக்கு உடைந்து - நெஞ்சம் நெகிழ்ந்துதளர்ந்து, பஞ்சு கண் அடையா -கண் பஞ்சடைந்து, உடும்பு உரித்தன்ன கடும்பசி மருங்குல் பழுப்புடைதோன்றிச் செழிப்பின்றி வைக உடும்பைத் தோலுரித்தால் ஒப்பக் கொடிய பசியினையுடைய வயிற்றின் பக்கத்துள்ள விலா எலும்புகள் தசையில்லாமையாற் பக்கங்களிற்றோன்றிச் செழுமையில்லாமலிருக்க, வறுமைஉழந்த உறுமனைக் கிழத்தியொடு - அவ்வாறெல்லாம் வறுமையில் வருந்திக்கிடக்கும் அன்பின் மிக்க மனைக்கிழத்தியுடன், நாளும் நாளும் வாளாது கலாய்த்து - நாடோறுங் காரணமின்றியே சண்டையிட்டு, நோனாப் பசியின் ஆனாது அழூஉம் புன் தலைக் குழவிதன் திறம் நோக்கி - பொறுத்தற்கரிய பசியினால் இடை விடாது அழுகின்ற அழுக்குற்ற தலையினையுடைய தம் குழந்தை களின் நிலையைக்கண்டு, கனவு காண்பொழுதும் நனவு எனத் தோன்றும் அருந்துயர் என்றும் பெரும் துயர் உறுப்ப - அவற்றை யெல்லாம் இடையறாது எண்ணுதலாற் கனவுகாணுங் காலங்களிலும் நனவுபோலவே தோன்றும் உன்னுதற்கும் அரிய துயரங்கள் எந்நாளும் மிக்க வருத்தத்தை மிகுத்திடாநிற்ப, மிடிகெழுவாழ்க்கையில் குடியாயிருந்து - அங்ஙனம் வறுமை பொருந்திய ஏழைமை வாழ்க்கையிலேயே குடியிருப்பாயிருந்து, மழுங்கிய உள்ளத்து ஒடுங்கிய புலவோய் - கிளர்ச்சியவிந்த உள்ளத்தினையுடைமையாற் செயலொடுங்கிய புலவோய்!

என்பது.

டை

‘அடையா’ செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; “நிலங்கிளையா நாணிநின்றோள்” (அகநானூறு, 16) என்புழிப்

போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/282&oldid=1587026" இலிருந்து மீள்விக்கப்பட்டது