உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

-

மறைமலையம் - 20

‘உடும்புரித் தன்ன மருங்குல்' எனப்பட்டது, பசியால் வயிறு முதுகொட்டி விலா எலும்பெழுந்து நிற்றலின். பழு

-

விலா

எலும்பு, “பொருவில்யானையின் பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை என்றார் சிந்தாமணியிலும் (1561). உடும்புரித்தன்ன என்பெழுமருங்கிற், கடும்பின் கடும்பசி” எனப் புறநானூற்றினும் (68) போந்தமை நோக்குக.

66

உறுமனைக்கிழத்தி, அன்பின்மிக்க நன்மனைக்கிழத்தி; வறுமையின் கொடுமையால் இல்லத்தில் அடிக்கடி காரண மின்றியே சண்டைகள் உண்டாதல் இயல்பாதலால், 'நாளும் நாளும் வாளாது கலாய்த்து' எனப்பட்டது; கலாய்த்தல் சண்டையிடுதல், சிந்தாமணி 1950.

வறுமையில் உழலுஞ் செழுமையில்லாக் குழந்தைகட்குத் தலைசடைத்து அழுக்கேறிக், காண அருவருப்பாயிருக்கு மாதலின் அவை ‘புன்றலைக் குழவிகள்' எனக் குறிக்கப்பட்டன. திறம் - நிலைமை; மிடிமை - தீராவறுமை.

(12-13) இயற்றமிழ் வரம்பு திறப்பட ஆய்ந்து - இயற்றமிழ் நூன் முடிவைத் திறம்பட ஆராய்ந்து, புலம்கொள நிரம்பிய நலம் கிளர் அறிவோய் - உள்ளத்தின் இடம் முழுதுங் கொள்ளுமாறு நிறைந்த நன்மைமிக்க அறிவுடையோய்;

'இயற்றமிழ்' என்பது, முத்தமிழ்களுள் ஒன்று; ஏனைய இசைத்தமிழ்’ ‘நாடகத்தமிழ்’ என்க. இயற்றமிழாவது திருந்திய வழக்காய் நாம் பேசுவதும் எழுதுவதுமான செந்தமிழாகும். வரம் பென்றது, இங்கு நூல் வரம்பு.

(14-15) வழுஒன்று இல்லா விழுமிய ஒழுக்கம் பிழைபாடு சிறிது மில்லாத சிறந்த ஒழுக்கத்தை, உயிரினும் ஓம்பும் செயிர் அறுபெரியோய் - தன் ஆருயிரினும் பெரிதாக மதித்துக் காக்குங் குற்றமற்ற பெருமையுடையோய்;

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று பொய்யா மொழியுங் கட்டுரையாநிற்கும். 'ஒன்று' இங்குச் சிறிதென்னும் பொருட்டு; "மாயைக்கு உணர்வொன்று மில்லையென்றே வைத்திடும்” (சிவஞான சித்தியார்,1:17) என்புழிப்போல. செயிர் குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/283&oldid=1587027" இலிருந்து மீள்விக்கப்பட்டது