உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

259

(16) கொழுந்தமிழ் போலக் குளிர்மாண் குணத்தோய் செழுந்தமிழ் மொழியைப்போற் குளிர்ச்சியும் மாட்சியும் மிக்க இயல்பினோய்;

சுவைநிரம்பிய மென்சொற்களாலும் ஆழ்ந்தகன்ற சிறந்த கருத்துக்களாலும் நமதரிய செந்தமிழ்மொழி தன்னை மேவுவார்க்குக் குளிர்ச்சியும் மாட்சியுமா யிருத்தல்போற், புலவருந் தம் இன்சொற்களாலும் நல்லொழுக்கங்களாலுந் தம்மை நச்சுவார்க்குத் தண்ணென்னு மாண்புடையராய்க் காணப்படுவரென்க. தமிழுக்கு இத்தண்மையும் மாட்சியு மிருத்தல், "உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருக்கோவையார் திருமொழி யானுந் தெளியப்படும்.

(17-18) உழுந்துருள் அளவையிற் செழுந்தமிழ்ப் பாக்கள் நூறுநூறு இயற்றுங் கூறுபடு மதியோய் - உழுந்து உருளுகின்ற அவ்வளவு விரைந்த நேரத்திற் செழுந்தமிழ்ப் பாட்டுகள் நூறுநூறாகச் செய்யும் பகுத்தறியும் மதிநுட்ப முடையோய்;

அளவை, இங்குக் காலவெல்லை. கூறுபடுமதியாவது நல்லதன் நலனுந் தீயதன் தீதும் பகுத்துணரும் அறிவு.

(19-20) ஒளிச்செலவு அதனினும் வளிச்செலவு அதனினும் -ஒளியோட்டத்தின் விரைவைப் பார்க்கினும் காற்றோட்டத்தின் ரைவைப் பார்க்கினும் மிகுவிரைவாக, நெறிப்படக் கிளக்கும் மிறைக்கவி வல்லோய் -ஒழுங்குபட இசைக்குஞ் சித்திரக்கவி வல்லபுலவோய்;

தீ

ஒளிச்செலவென்பது ஞாயிறு திங்கள் தீ முதலியவற் றினின்று புறம்போதரும் ஒளியோட்டங்கள். ‘செலவு', செல்கை; இங்கு விரைவுநோக்கி ஓட்டமெனக்கொள்க. “வெருவருஞ் செலவின் வெகுளிவேழம்" (பொருநராற்றுப்படை,172).

(21-22) அளவைநூல் மரபில் பிறழாது - தருக்கநூல் முறையில் தவறாது, யாண்டும் கொள உரை நிகழ்த்தும் வளம் உறும் உணர்வோய் - எங்குங் கேட்போர் உளங்கொள உரை விரிக்கும் வளமுற்ற உணர்வுடையோய்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/284&oldid=1587028" இலிருந்து மீள்விக்கப்பட்டது