உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் - 20

அளவைநூல், தருக்கநூல்; வளம், ஆராய்ந்துகண்ட

நூற்பொருள்வளம்.

-

-

(23 - 24) பொருளியல் அறிந்து எடுத்துக்கொண்ட விரிவுரைப்பொருளின் வகைமை தெரிந்து, மருள் அறப் புனைந்து மயக்கமற அழகுப்படுத்துக் கூறி, கேட்போர் பிணிக்கும் காட்சிசால் உரவோய் - கேட்பவர்கள் உள்ளத்தைத் தன் வயப்படுத்தும் மெய்யுணர்வு நிரம்பிய அறிவுவலியுடையோய்;

'புனைதல்' சொற்களையுங் கருத்துக்களையும் இடம் நோக்கிச் சுருக்கியும் பெருக்கியும் உவமித்தும் உருவகித்து மெல்லாம் அழகுபடுத்திக் கேட்பார்க்கு இன்பம் விழைவு வேட்கை முதலான மெய்ப்பாடு உண்டாகச் சொல்லுதல்; இங்ஙனம் அழகுபடுத்துச் சொல்லப்பட்டனவே பண்டைக் காலத்தில் ‘இலக்கியம்' எனவும், 'நூல் நயம்' எனவுங் கூறப்பட்டு வந்தன.'நவிறொறும் நூல்நயம் போலும்” எனத் திருவள்ளுவரும் இதனைச் சிறந்தெடுத்துப் பாராட்டுவர். ஆனால், இடை காலத்தோ அவ்வழகுபடுத்தும் உரை'கற்பனை' யெனக் கூறப்பட்டுப், பிற்காலத்தே அதுவும் நிலைமாறி 'இயற்கைக்கு மாறாகப் பொய்யுரை புனைதல்' என்னும் இழிவுபொருளில் வந்து வழங்கிப் பெருமை குன்றுவதாயிற்று.

டைக்

(25-28) பண்டைப் பிறவியில் தண்டாது ஆற்றும் பெரும் தவம் உடையை மன்னே - பழம் பிறவிகளில் தவறாம லியற்றும் பெருமையான தவத்தினை நிரம்பவும் உடையை; பொருந்தி இன்று ஈங்கு எனைத் தலைப்பட்டனையே - பொருந்துதல்வர இன்று இங்கு வந்து என்னை எதிர்ப்பட்டனையே, ஓங்கி ஊழிசெல்லினும் நீடு வாழ்மதி - மேம்படச் சிறந்து ஊழிகழியினு நெடுங்காலம் வாழ்வாயாக;

-

தண்டல் - தவறுதல் (பிங்கலந்தை); அதன் எதிர்மறை ‘தண்டாமை'; இவை 'தள்' என்னும் முதனிலையிற் பிறந்தன; “கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை” என்றார் திருவள்ளுவரும்.

-

மன், மிகுதிக்கண் வந்தது. தலைப்படல் வ எதிர்ப்படல். பொருந்துதல் வரத் தலைப்பட்டமையாவது வறுமையுழந்து அது தீர்ந்த ஒரு புலவனை, வறுமையுழக்கும் மற்றொரு புலவன் அதுதீர்தற் பான்மையில் வந்து எதிர்ப்பட்டமை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/285&oldid=1587029" இலிருந்து மீள்விக்கப்பட்டது