உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

261

(29-34) கீழ்த்திசை எழீஇ மேற்றிசைப் படரும் தீத்தெறு ஞாயிறு வடதிசைப் புணர்ந்து தென்திசை நோக்கித் திசைதடு மாறினும் - கிழக்குப் பக்கத்தில் தோன்றி மேற்குப் பக்கத்திற் செல்லும் நெருப்பெனச் சுடும் ஞாயிறு வடக்குப் பக்கஞ் சேர்ந்து தெற்குப் பக்கம் நோக்கிச் சென்றபடியாய் இங்ஙனந் திசை தடுமாறினாலும், வானக் கடலின் மீனென வயங்கும் உடுநிரை உதிர்ந்து கொடுமையாயினும் - வானமென்னுங் கடலின்கண் மீன்களென விளங்கும் உடுக்குலங்கள் உதிர்ந்த விழுதலால் உலகத்திற் கொடிய நிகழ்ச்சிக களுண்டாயினும், உலவா வாழ்க்கையின் நிலைமதி சிறந்தே கெடாத நல்வாழ்க்கையிற் சிறந்து நிலைப்பாயாக;

-

படரல் - செல்லல்; உடு - விண்மீன்; நிரை, கூட்டமென்னும் பொருட்டு; உலகின்கட் கேடுகள் விளையினும் நின் நல்வாழ்வு கெடாது ாது இனிதூழி வாழ்ந்து இன்புறுகவென்பது இப்பகுதியின் கருத்து.

(35-36) வறுமை களைந்து சிறுமை நீங்கி - வறுமையைநீக்கி எளிமை ஒழிந்து, நன்னிலை பலவும் இன்னே பெறுதி - நல்ல நிலைமைகளெல்லாம் இப்பொழுதே பெறுவாயாக;

நிலை, இன்பங்கள் பலவுந் துய்த்தற்கேற்ற நிலைமை. ன்னே' இப்பொழுதே எனப் பொருள் படுதல், “உற்றதின்னே இடையூறு” என்னுஞ் சிந்தாமணியுள்ளுங் (226) காண்க.

(37) வரம்பறும் இன்பம் நிரம்பக் கோடி - எல்லையற்ற இன்பம் நிரம்பக் கொள்வாயாக;

எல்லையற்ற இன்பம், அளவற்ற இன்பம்; 'கோடி' என்பதற்குக் 'கொள்' பகுதி; அது முதல் நீண்டு தகரம் விரித்தலும் வியங்கோள் ஈறும் பெற்றுக் 'கோடி' யென்றாயிற்று. கோடி, கொள்ளுதி; ‘வாழ்மதி, நிலைமதி, பெறுதி, கோடி' யென்பன வாழ்த்துதற் பொருண்மைக்கண்வந்த வியங்கோள் வினை முற்றுகள்.

(38-39) நின் உயிர்க்கு உறுதிநாடி - நினது உயிர்க்கு நன்மை பயத்தற்குரியவைகளை ஆராய்ந்தறிந்து, துன்னி நின்றுநின்னை அணுகி நின்று, நிரைநிரை கூறும் என் உரை பிழையலை - முறை முறையாகக் கட்டுரைத்துச் சொல்லும் என் சொற்களைத்

தவறவிடாதிருப்பாயாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/286&oldid=1587030" இலிருந்து மீள்விக்கப்பட்டது