உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் - 20

-

நாடி ஆராய்ந்து; "நாடாது நட்டலிற் கேடில்லை” திருக்குறள்.

(40-42) இன்னும் கேட்டல் வேண்டின் - இன்னும் நான் எடுத்துரைத்தலை நீ கேட்டல் விரும்பினாயானால், முன்னும் என் சொல் அளவு அமைந்து நலம் பல எய்தினர் பல்லோர் பல்லோர் பண்டும் உண்டு - நான் நினைத்துக் கூறும் என் மொழிகளின் எல்லையில் நின்று நன்மைகள் பலவும் அடைந்தவர் பலர் பலர் முன்னும் உண்டு;

(43) இனியொன்று கூறுவென் கேண்மதி - ஆதலால் இனி ஒன்று சொல்லுவேன் அதனைக் கேட்பாயாக! வென்ப து

,

'கூறுவென்' என்பதில் ‘என்' ஈறு தன்மையொருமை வினை முற்று (தொல்காப்பியம், வினையியல், 6); “கொன்னொன்று கிளக்குவென் கேண்மதிபெரும” என முன்னும் வந்தமை நினைவு

கூர்க.

-

(43-45) பனிகெழு முல்லைஅம் கொடிக்கு குளிர்ச்சி பொருந்திய முல்லையின்கொடிக்கு, மல்லல் அம் செழும்தேர் - செல்வத்திற் சிறந்த அழகிய தேரை, அருள்வர - தனக்கு இரக்க முண்டாக, ஈத்த- அதற்குக் கொழுகொம்பாகும்படி நிறுத்தி உதவிய, பெரியனோ இலனே - ஈகையிற் பெரியனாகிய பாரியோ இஞ்ஞான்று வாழ்ந்திலனே!

வள்ளலிற் சிறந்த பாரியின் இவ்வரிய பெரிய ஈகைச்செயல், “சுரும்புண்

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்

பறம்பிற் கோமான் பாரியும்"

எனச் சிறுபாணாற்றுப்படையின்கட் (87 - 91) பெரிது பாராட்டப் படுதலும் இங்கு நினைவுகூரற்பாலது.

'அம் ஈரிடங்களினுஞ் சாரியை; ஈற்றேகாரம் இரக்கப் பொருளது; மேல்வருவனவும் அன்ன.

(46 - 47) விழியாக் கண்ண செழுமயிர்த் தோகைக்கு - மையாக் கண்களுள்ள நிறத்தாற் சிறந்த மயிர்கள் வாய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/287&oldid=1587031" இலிருந்து மீள்விக்கப்பட்டது