உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

5

முடிக்கப்பட்டதென்னுங் குறிப்பு அகப்பட்டமையால், இந்நூல் துவக்கஞ்செய்யப்பட்டகாலம். 1899 இன் இடையில், அதாவது எமது இருபத்துமூன்றாம் ஆண்டின் துவக்கத்தின் கண்ணதாகல் வேண்டுமென்பதூஉம் உய்த்துணரப்படுகின்றது.

L

னி, இதற்குரையெழுத முயன்ற மாணவர் பலரின் முயற்சியிற் பாலசுந்தரம்பிள்ளை யென்னுந் திரு. இளவழக னாரின் முயற்சியே நிறைவேறலாயிற்று. இவர் பன்னிரண் டாண்டுகட்கு முன் எம்மிடந் தமிழ்நூல் கற்றுவந்தகாலத் திலேயே, இதற்குரையெழுதக் கருதிய தமது குறிக்கோளைத் தெரிவித்து, இதனை முறையாக எம்மிடம் பாடங்கேட்டு வந்தனர். யாஞ் சொல்லிவந்த உரைகளையுங் குறிப்புகளையும் அவ்வப்போது குறித்துக்கொண்டு வந்து பின்னர் அவைகளை யெல்லாம் ஓரொழுங்குபடுத்தெழுதி, எழுதிய கையெழுத்துப் படியினை 1932. மார்ச்சு, 28-ஆம் நாள் எம்மிடஞ் சேர்த்து, அதனை முழுதும் பார்த்துத்திருத்தி அச்சிட்டு வெளியிடும்படி எம்மை வேண்டிக் கொண்டனர். அங்ஙனமே அதனை முழுதுந்திருத்தி அச்சிட்டு முடிப்பதற்கு எட்டாண்டுகட்கு மேற் சென்றன. உரையின்கட் செய்யப் பட்ட திருத்தங்கள் பல: ஆக்கியோன் கருத்துக்கு மாறாய்க் காணப்பட்டவைகளை அம்மாறுகோள் நீக்கி இயைபு படுத்தியதும்; உரையெழுதாமல் விடப்பட்ட சில பகுதிகட்கு உரைவகுத்ததும்; சொற்பொருள் கட்குப் பிற்காலத்து நூல்களி லிருந்து எடுத்துக்காட்டிய ய மேற்கோள்களை நீக்கி, முற்காலத்துச் செந்தமிழ்ப் பழ நூல்களிலிருந்தே மேற்கோள்கள் காட்டியதும்; மேற்கோள் காட்டப்படாதவற்றுக்கு மேற் கோள்கள் காட்டியதும்; இலக்கணக் குறிப்புகள் பல மாற்றியதும், பல புதியவாய்ச் சேர்த்ததும்; உரைநயங்கள் பல மாற்றியதும் புதியவாய்ச் சேர்த்ததும்; சொற்களையுஞ் சொற்றொடர் களையுஞ் செந்தமிழ்ச்சுவை துளும்ப மாற்றியதும்; இன்னும் இவைபோன்ற நுண்ணிய திருத்தங்கள் பல உரைநெடுகச் செய்ததுமாகும்.

ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை அந்நூலாசிரியன் காலத்தே செய்யப்பட்டு அவனாலேயே முழுதுந்திருத்தப் பட்டு அமையு மானால், அத்தகைய உரையே நூலாசிரியன்றன் கருத்தறிந்த உரையாகும். அப்பெருநலம் இம்மும்மணிக் கோவைக்கு வாய்க்குமாறு முருகப்பிரான் றிருவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/30&oldid=1586748" இலிருந்து மீள்விக்கப்பட்டது